கம்பராமாயணம் 6580 · யுத்த 5.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மேல்திசை வாயிலில் வைகும் - இலங்கை மாநகரின் மேற்குத் திசை வாயிலைக் காவல் புரிந்து தங்கியுள்ள; வெய்யவர்க்கு ஏற்றமும் உள - கொடியவர்களுக்குச் சில தனியான மேன்மைகளும் உண்டு; அவர்க்கு இரண்டு கோடி மேல் - வடதிசை வாயிலில் உள்ளவர்களை விட இரண்டு கோடி அதிகம் (எனவே இவர்கள் 12 கோடி பேர்); கூற்றையும் கண்பொறி குறுகக் காண்பரேல் - எமனையும் கூட கண்ணைச் சிறிதே குறுக்கிப் பார்ப்பாரென்றால், ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்பர் - ஊறுகின்ற இரத்தத்துடன் உயிரையும் உண்டு விடுவார்கள்.
வடதிசை வாயில் காவலர்களை விடவும், மேற்றிசைக் காவலர்களுக்குச் சில மேன்மைகள் உண்டு என்பார் 'வெய்யவர்க்கு ஏற்றமும் உள' என்றார். அவர்களை விட இரண்டு கோடி அதிகம் என்பதொரு ஏற்றம். அது தவிர இவர்கள் கண்களைச் சிறிதே திறந்து குறுக்கிப் பார்க்கும் பார்வையிலேயே கூற்றுவனுடைய இரத்தத்தோடு உயிரையும் உண்டு விடுவார்கள் என்பது கருத்து: கட்பொறி - கண்ணாகிய இந்திரியம். பரமன் கண்ணைச் சிறிது விழித்தாலும் பெருகும் கருணையால் உலகம் வாழும் 'செங்கண் சிறுச் சிறிதே எம் மேல் விழியாவோ” என்பது கோதையார் வாக்கு. அதுபோல வெய்யவர் சிறிதே விழித்தாலும் துன்பம் விளையும். மேலும் மேலும் ஊறும் இரத்தத்தை 'ஊற்றுறு குருதி” என்றார். கூற்று - எமன்; உடலையும் உயிரையும் கூறுசெய்பவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The fierce ones who guard the western gate have more to boast of still:
- they number two crores more than those;
- should they so much as narrow their eyes at Death himself,
- they would drink his life along with his welling blood."
What the poem says
The western gate is guarded by even more rākṣasas, two crores more than the northern gate, and they are even fiercer.
A mere narrow-eyed glance from them could drain the life and blood of Yama, god of death. The commentary contrasts this with Āṇṭāḷ's prayer that the Lord open his red eyes "just a little" on his devotees: where God's glance gives life, these demons' glance destroys it.