கம்பராமாயணம் 6582 · யுத்த 5.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கீழ்த்திசை வாயிலின் வைகும் கீழவர் - கிழக்குத் திசையிலுள்ள வாயிலில் காவல் புரிந்திருக்கும் கீழ்மக்கள்; ஈட்டமும் எண்இரு கோடி என்பரால் - கூட்டமும் பதினாறுகோடி; கோட்டு - வலியதந்தங்களை உடைய; இருந்திசை நிலை - அகன்ற எட்டுத் திசைகளிலும் நிலைத்து நிற்கும்; கும்பக் குன்றையும் - மத்தகத்தையுடைய மலைபோன்ற திக்கு யானைகளையும்; தாள் துணை பிடித்து - அவற்றின் இரு கால்களையும் பிடித்துத் தூக்கி; அகன் தரையின் எற்றுவார் - தரையிலே மோதியடித்துக் கொல்லும் வல்லமை உடையவர்கள்; அகன்தரை - அகன்ற தரையிடம்.
கீழ்த்திசை என்பது எதுகை நோக்கி 'கட்டிசை” எனத் திரிந்தது. கும்பம் - மத்தகம். திக்கு யானைகளின் கால்களைப் பிடித்து, மேலே தூக்கித் தரையில் மோதிக் கொல்லவும் வல்லவர்கள் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The host of base ones who keep the eastern gate
- are also said to number twice eight crores;
- even the tusked, mountain-like elephants that stand in the wide quarters,
- they would seize by their two legs and dash upon the broad earth."
What the poem says
The eastern gate also has sixteen crores of guards. Their strength is shown by an image: they could grab the cosmic elephants, which stand at the eight directions holding up the world, by the legs and smash them against the ground.
The poet uses kīḻavar, "the low ones", a pun on kīḻ, which means both "east" and "base".