கம்பராமாயணம் 6583 · யுத்த 5.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விண்ணிடை விழித்தனர் நிற்கும் வெய்யவர் - வானத்திலே தேவர்கள் வரக்கூடும் என்பதால் உறங்காமல் கண் விழித்தவர்களாக நின்று காவல் புரியும் கொடியவர்; எண் இரு கோடியின் இரட்டி என்பரால் - பதினாறு கோடியின் இரண்டு மடங்கான முப்பத்திரண்டு கோடி என்பார்கள்; மண்ணிடை வானவர் வருவர் என்று - மண்ணுலகத்துக்கு தேவர்கள் வருவார் என்று கருதி; கண்ணிலர் - ஒரு சிறிதும் கண்ணோட்டம் இல்லாதவர்களாய்; கரந்து போயினார் - தமது வடிவத்தை மறைத்துக் கொண்டு, வேறு வடிவத்திலே உலாவுபவர்கள்; கரை இலர் - அளவற்றவராவர்.
நான்கு திசையிலும் வாயில்களைக் காவல் காப்பவர்களைத்தவிர, விண்ணிலும் நின்று காவல் புரிந்தனர். கண் - கண்ணோட்டம். சிறிதும் கண்ணோட்ட மில்லாத கொடியவர்கள் என்பதால் 'கண்இலர்' என்றார்; இரக்கம் சிறிதுமில்லாதவர்கள் என்பது பொருள். தேவர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்குப் புலனாகாதபடி வடிவத்தை மறைத்து, வேறு வடிவத்திலே இருந்தனர் என்பதால் 'கரந்து
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The fierce ones who stand awake in the sky
- are said to be twice sixteen crores;
- and those who, thinking the gods may come down to earth, go about in disguise,
- pitiless, are beyond all reckoning."
What the poem says
Besides the gate guards, Ilaṅkai is watched from the sky by thirty-two crores of sleepless sentries, posted in case the gods attack from above.
There are also countless pitiless rākṣasas who move about in disguise on earth, watching for gods who might come in some other form.