கம்பராமாயணம் 6585 · யுத்த 5.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இப்படி மதில் ஒரு மூன்று - இத்தகைய கட்டுக் காவலை உடைய மதில்கள் மூன்றாகும்; வேறு இனி ஒப்பரும் பெருமையும் - இதை விட வேறாக அந்த மதில்களின் ஒப்பற்ற பெருமையை; உரைக்க வேண்டுமோ - விரிவாகக் கூறவும் வேண்டுமோ?; மெய்ப் பெரும் திருநகர் - உண்மையான பெருமைமிக்க அந்த அழகிய இலங்கை நகரை; காக்கும் வெய்யவர் - காவல் காக்கும் கொடியவர்கள்; முப்பது கோடியின் மும்மை முற்றினார் - தொண்ணூறு கோடிபேர் என நிறைந்துள்ளனர்.
இப்படி, மேலே கூறியபடி, உண்மையாகவே இலங்கை பெருந்திருநகர் என்பார் 'மெய்ப் பெரு' என்றார். இலங்கை அழகிய நகராதலின் 'திருநகர்' என்றார். 'பிறந்த ஊர் என்பதாலும் வீடணன் 'திருநகர்' எனச்சிறப்பித்துக் கூறினானென்க. முப்பது கோடியின் மும்மை - முப்பது கோடியின் மூன்று மடங்கு. முற்றுதல் - நிறைதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "There are three such walls; need I go on
- to tell their matchless greatness?
- The fierce ones who guard the truly great and splendid city
- come to thirty crores three times over."
What the poem says
Vīṭaṇaṉ reveals that Ilaṅkai has not one but three such walls, each guarded in the same way.
Within, the city itself is protected by ninety crores of fierce rākṣasas. He calls Ilaṅkai "the truly great and splendid city"; it is, after all, his own birthplace.