கம்பராமாயணம் 6587 · யுத்த 5.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விடம் அல விழி எனும் - இவை விடம் அல்ல விழிகள்தான் என்று கூறும்படி; வெகுளிக் கண்ணினர் - கோபம் மிக்க கண்களை உடையவர்கள்; இமைத்தலும் கடன் அல - கண்களை இமைப்பதும் நமது கடமையல்ல; என்னும் காவலர் - என்று கூறும்படி காவல் காப்பவர்கள்; வட வரை புரைவன - வட வரையான மேரு மலையைப் போன்றனவாகிய; கோயில் வாயிலின் - இராவணனுடைய அரண்மனை வாயிலில்; இடம் வலம் வருபவர் - இடதுசாரி, வலது சாரியாகத் திரிந்துவருகின்றவர்கள்; எண்ணெண் கோடி - அறுபத்து நான்கு கோடிப் பேராவர்.
கோபம் கொண்டு விழிக்கும் காவலர்களின் கண்கள் விடம் போன்ற கொடியவை என்பதால் 'விடம் அல விழி' என்றார். காவல் புரிபவர் கண்களை இமைத்தலும் கடமைதவறியதாகும் என்பதால் "கடன் அல இமைத்தலும்" என்றார் வடவரை - மேருமலை. கோயில் - அரண்மனை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Guards with wrathful eyes, of whom one says, 'Those are not eyes but poison',
- watchmen who say, 'Even to blink is not our duty',
- pacing left and right at the gates of the palace, which are like the northern mountain,
- number eight times eight crores.
What the poem says
Rāmaṉ has asked about the strength of Ilaṅkai, and Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's brother who has come over to Rāmaṉ, is describing it. Here he counts the guards at Irāvaṇaṉ's palace gates: sixty-four crores of them, their furious eyes so deadly they seem to hold poison.
They are so watchful that they treat even blinking as a lapse of duty. The palace gates are compared to Mēru, the great northern mountain; 'kōyil', temple, is used in the old sense of a king's palace.