கம்பராமாயணம் 6588 · யுத்த 5.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்றியும் அவன் அகன் கோயில் - அல்லாமலும் அந்த இராவணனுக்குரிய விசாலமான அரண்மனையில்; ஆய்மணி முன்றிலின் - ஆராய்ச்சி மணி கட்டப்பட்டுள்ள முற்றத்திலே; வைகுவார் முறைமை கூறிடின் - தங்கிக் காவல் புரிபவர்களின் தன்மையைக் கூறுவோமாயின்; ஒன்றிய உலகையும் - ஒன்றாக உள்ள உலகத்தை எல்லாம்; எடுக்கும் ஊற்றத்தார் - தமது கைகளால் தூக்கவல்ல ஆற்றல் உள்ளவர்களும்; குன்றினும் வலியவர் - மலையினும் வலிமைமிக்கவர்களும் ஆகிய வீரர்கள்; கோடி கோடியே - கோடி கோடிப் பேராவர்.
அரசர்கள் வாழுமிடமும் 'கோயில்' என்பது மரபு. ஆய்மணி - ஆராய்ச்சிமணி, அரசர்களின் அரண்மனை வாயிலில் ஆராய்ச்சி மணி கட்டுதல் உண்டென்பது 'வாயிற்கடைமணி நடு நா நடுங்க' எனவரும் சிலப்பதிகார உரையால் புலப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Moreover, if I tell the nature of those who dwell in his wide palace
- in the courtyard of the bell of justice,
- they have the strength to lift the whole united world;
- mightier than mountains, they number crore upon crore.
What the poem says
Vīṭaṇaṉ goes on to the warriors who keep watch inside Irāvaṇaṉ's palace courtyard: countless crores of them, each strong enough to lift the world and harder than a mountain.
The 'āy maṇi' is the bell of inquiry hung at a king's gate, which petitioners rang to seek justice; the commentary recalls the Cilappatikāram's line about the gate-bell's tongue trembling as evidence of the custom.