கம்பராமாயணம் 659 · பால 10.107
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இவ்வாறு தன் தவம் அழிந்தது) விண் முழுது ஆளி - தேவலோகம் முழுவதும் ஆட்சி புரியும் இந்திரனது; செய்த வினை என - வஞ்சனைச் செயலாகும் என்று அறிந்து; வெகுண்டு - சினம் கொண்டு; நீ போய் மண்மகள் ஆதி - நீ நிலவுலகம் சென்று மானிடப் பெண்ணாகப் பிறப்பாயாக; என்று மடவரல் தன்னை - என்று அத்திலோத்தமையை; ஏவி - சபித்து விட்டு; கண்மலர் சிவப்ப - (சினத்தால்) தாமரை போன்ற கண்கள் செந்நிறம் அடையவும்; உள்ளம் கறுப்பு உற - மனம் கோபப்படவும்; கடிதின் ஏகி - (அவ்விடம் விட்டு) விரைவிலே சென்று; எண்மரில் வலியன் ஆய - எண் திசைப் பாலகர்களில் வலிமையுள்ளவனான; யமன் திசை தன்னை - யமனது திசையை, உற்றான் - அடைந்தான் (கௌசிகன்).
தனது தவம் குலையக் காரணமான திலோத்தமையைச் சபித்த பின் கௌசிகன் தவம் செய்யத் தென்திசை சென்றான். தென்திசைப் பாலகன் - இயமன். 'கூற்றத் தன்ன மாற்றரு முன்பின்' - (புறம் 362) எண்மரில் இயமன் வலியன் என்பது பெறப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Enraged, seeing it as the work of him who rules all heaven, he commanded the maiden,
- 'Go and become a woman of the earth,'
- and with his flower eyes reddening and his heart darkening, he went swiftly
- and reached the quarter of Yamaṉ, strongest of the eight.
What the poem says
Realising that Indra contrived his downfall, Kaucikaṉ curses Tilōttamai to be born as a mortal woman on earth. Eyes red and heart black with anger, he leaves at once for the south, the quarter of Yama, mightiest of the eight guardians of the directions, to begin his penance again.