கம்பராமாயணம் 6590 · யுத்த 5.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆழியாய் - ஆணையாகிய சக்கரத்தை உடையவனே; பேயனேன் - பேய் போன்றவனாகிய நான்; என் பல பிதற்றி பேர்த்து - பலவும் திரும்பத்திரும்பக் கூறுவதால் என்ன பயன்?; அவன் மாயிரு ஞாலத்து - அந்த இராவணன் இப் பெரிய உலகத்திலே; வைத்த மாப்படை - நிறுத்தி வைத்துள்ள பெரியபடை; நாளெலாம் தேயினும் - உலகுள்ள நாள் வரை அழித்தாலும்; தேய்க்க வேண்டுவது - அழித்துக் கொண்டே இருக்க வேண்டியதாய் இருக்கும்; ஆயிர வெள்ளம் என்று அறிந்தது - எனத் தெரிந்தது ஆயிரம் வெள்ளம் அளவினதாகும்.
வெள்ளம், ஒரு பெரிய அளவு; பதுமத்திலும் அதிகமானது. சக்கரவர்த்தி திருக்குமாரனாதலின் எங்கும் செல்லும் ஆணையுடையவன் என்பதால் 'ஆழியாய்' என்றான். சக்கரப் படையுடைய திருமால் என்ற நினைப்பிலே கூறியதுமாம். உலகமுள்ள நாளெலாம் அழித்தாலும் அழித்துக் கொண்டே இருக்கலாம் என்பதை 'நாளெலாம் தேயினும் தேய்க்க வேண்டுவது' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Why should I, a foolish one, babble on about so much, over and over? The great army
- that he has stationed across this vast wide world
- is such that, even if you wore it down every day,
- there would still be more to wear down: a thousand vellams, I learned, O lord of the wheel!
What the poem says
Vīṭaṇaṉ breaks off his counting: there is no point in going on. Irāvaṇaṉ's forces spread over the world amount to a thousand vellams, a number even larger than the padma, so that one could destroy them every day for as long as the world lasts and still not finish.
He calls Rāmaṉ 'lord of the wheel': the son of an emperor whose command runs everywhere, and also, perhaps, Tirumāl who bears the discus.