கம்பராமாயணம் 6592 · யுத்த 5.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தும்பி ஈட்டமும், இரதமும் புரவியும் - யானைக் கூட்டமும், தேர் குதிரை ஆகியவற்றுடன்; தொடர்ந்த அம்பொன் மாப்படை - சேர்ந்த அழகிய பொன் போன்ற அரிய பெரிய படை; ஐயிரு கோடி கொண்டமைந்தான் - பத்துக் கோடி பேரைக் கொண்டு அமைந்தவனும்; செம்பொன் நாட்டுள சித்தரை - செம்பொன் நாடாகிய தேவ உலகில் வாழும் சித்தர்களை; சிறையிடை வைத்தான் - போரில் வென்று சிறையிலே வைத்தவனுமான; ஊழி வெங்கதிரினும் கொடியான் - யுகாந்த காலத்துச் சூரியனை விடவும் கொடியவன்; கும்பன் என்று உளன் - கும்பன் என்பவனும் இருக்கிறான்.
தும்பி - யானை. செம்பொன் - சிவந்த பொன். பொன் நாடு - தேவர்கள் உலகம். சித்தர் என்பார் தேவர்களில் ஒருவகைப் பிரிவினராவர் சித்தர்களைவென்று சிறையில் வைத்தவன் கும்பன். 'ஊழிவெங்கதிர்' ஊழிக் காலத்தின் இறுதியில் உலகை அழிக்கத் தோன்றும் வெப்பம் மிக்க சூரியன். அந்தப் பரிதியை விடவும் கொடியவன் கும்பன் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With herds of elephants, chariots and horses, and a following
- great army, fine as gold, ten crores strong, he stands equipped;
- he cast into prison the Cittars of the land of red gold;
- there is one called Kumpaṉ, crueller than the scorching sun of the world's end.
What the poem says
The roll of Irāvaṇaṉ's champions begins with Kumpaṉ, who commands ten crores of elephants, chariots, horses and men. He once defeated the Cittars, a class of celestial beings, in the golden world of the gods and held them captive.
He is called crueller than the blazing sun that rises at the end of an age to burn up the world.