கம்பராமாயணம் 6593 · யுத்த 5.35

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான்,
சுகம் பல் போர் அலால் வேறு இலன், பொரு படைத் தொகையான்,
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான்,
அகம்பன் என்று உளன், அலை கடல் பருகவும் அமைவான்.'

பொருள் · Meaning in Tamil

உகம் பல்காலமும் தவம் செய்து - பலயுகங்கள் தவம் செய்து; பெருவரம் உடையான் - பெரிய வரங்களைப் பெற்றிருப்பவனும்; சுகம் பல்போரலால் வேறிலன் - பல போர்களைச் செய்வதை விட வேறு இன்ப மில்லாதவனும்; பெரும்படைத் தொகையான் - பெரிய படையை உடையவனும்; நகம் பல் என்றிவை இல்லதோர் - நகம், பல் என்பவைகளைப் பெற்றிருக்காத ஒரு; நரசிங்கம் அனையான் - நரசிங்கத்தைப் போன்றவனும் ஆன; அகம்பன் என்றுளன் - 'அகம்பன்' என்ற பெயர் கொண்ட ஒரு அரக்கர்தலைவன் உள்ளான்; அலை கடல் பருகவும் அமைவான் - அலைகளை உடைய கடல்நீர் முழுவதையும் குடிக்கவும் வல்லவன்.

அகம்பன் இராவணனுக்கு மாமன்முறைதான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Holder of great boons won by penance through many ages,
  2. knowing no pleasure but many battles, master of a vast host,
  3. like Narasiṅkam, only without the claws and fangs,
  4. there is one called Akampaṉ, able even to drink up the wave-tossed sea.

What the poem says

Next comes Akampaṉ, who did penance for ages and won great boons, and who takes delight only in war. He is compared to Narasiṅkam, the man-lion form of Tirumāl, lacking only its claws and teeth: as terrible, in other words, as that avatar. He could drink the whole ocean. The commentary notes that Akampaṉ is Irāvaṇaṉ's maternal uncle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ukam pal kālamum tavam ceytu peru varam uṭaiyāṉ,
cukam pal pōr alāl vēṟu ilaṉ, perum paṭait tokaiyāṉ,
nakam pal eṉṟu ivai illatu ōr naraciṅkam aṉaiyāṉ,
akampaṉ eṉṟu uḷaṉ, alai kaṭal parukavum amaivāṉ.'