கம்பராமாயணம் 6594 · யுத்த 5.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொருப்பை மீதிடும் - மலைகளையும் மீதிட்டுச் செல்லும்; புரவியும் பூட்கையும் தேரும் - குதிரைகளும், யானைகளும், தேர்களும்; உருப்ப விற்படை - சினம் மிக்க விற்படையினரான காலாட்படை வீரர்களும், ஒன்பது கோடியும் உடையான் - ஒன்பது கோடியை உடையவனும்; வானிடை செருப்பெய் சினக்கடாய் - வானத்திலே போர்புரிந்த சினம்மிக்க ஆட்டுக் கடாவினை; கடாய் வந்து செறுத்த - வாகனமாகச் செலுத்தி வந்து போரிட்ட; நெருப்பை வென்றவன் - அக்னி தேவனை வென்றவனும்; நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன் - சிறந்த வீரனுமான நிகும்பன் என்பவனும் உள்ளான்.
இங்குக் கூறப்படும் நிகும்பனும், அடுத்த பாடலில் வரும் கும்பனும் கும்பகர்ணனுடைய பிள்ளைகள் என்று வான்மீகம் கூறும். மீதிடும் - தாண்டிச் செல்லும். உருப்ப - கோபம் கொண்ட கடாய் - செலுத்தி அக்கினி தேவனுக்கு ஆட்டுக்கடாவாகனம் என்பர். அந்த நெருப்புக் கடவுளையும் வென்றவன் நிகும்பன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Owning horses, elephants and chariots that leap over mountains
- and nine crores of fierce bowmen,
- the one who conquered Fire when Fire came driving his angry ram into battle in the sky:
- there is a great one called Nikumpaṉ.
What the poem says
The next champion is Nikumpaṉ, with nine crores of troops: horses, elephants and chariots that can bound over mountains, and furious archers. Once Akkiṉi, the fire god, rode his ram into battle against him in the sky, and Nikumpaṉ defeated him.
The ram is Akkiṉi's traditional mount. The commentary adds that in Vālmīki, Nikumpaṉ and Kumpaṉ are sons of Kumpakaruṇaṉ.