கம்பராமாயணம் 6595 · யுத்த 5.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பேயை யாளியை யானையை - பேய்களையும், யாளிகளையும் யானைகளையும், கழுதையைப் பிணித்ததாய - கழுதைகளையும் பூட்டியதாகிய; தேர்ப்படை ஐயிரு கோடி கொண்டமைந்தான் - தேர்ப்படைபத்துக் கோடியை யுடையவன்; தாயை ஆயினும் சலித்திடு - பெற்ற தாய் ஆனாலும் கலக்கம் செய்யவல்ல; வஞ்சனை தவிரா மாயையான் - வஞ்சம் நீங்காத மாயையை உடையவன்; மகோதரன் என்று ஒரு மறவோன் உளன் - மகோதரன் என்னும் பெயருடைய ஒரு வீரன் உள்ளான்.
வஞ்சிக்கத்தகாதவள் அன்னை; அத்தகைய தாயையும் வஞ்சிக்கத் தக்க மாயையில் தேர்ந்தவன் மகோதரன்; 'தாயையும்' என்பதன் உம்மை உயர்வு சிறப்பும்மை. யாவர்க்கும் தாயாகிய சீதாபிராட்டியிடம், மருத்தன் என்னும் அரக்கனை சனகன் வேடம்தாங்கி வரச் செய்து பிராட்டியை வஞ்சிக்க முற்பட்டதை நினைந்து 'தாயையாயினும் சலித்திடு வஞ்சனை' என்றார் போலும். அறத்துக்குப் புறம்பானது மறம் என்பதால் 'மறவோன்' என்ற சொல்லுக்குப் பாவி என்பதும் பொருந்தும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Master of a chariot army of ten crores, its cars yoked
- with demons, yāḷis, elephants and donkeys,
- a sorcerer whose deceit never ceases, who could trouble even his own mother:
- there is a fierce one called Makōtaraṉ.
What the poem says
Makōtaraṉ commands ten crores of chariots drawn by ghouls, yāḷis (mythical lion-like beasts), elephants and donkeys. He is a master of illusion who would deceive even a mother, the one person no one should deceive.
The commentary suggests a pointed allusion: Makōtaraṉ is the one who had a demon disguise himself as Caṉakaṉ, Cītai's father, to trick her, and Cītai is the mother of all. The word for 'fierce one' can also mean 'sinner'.