கம்பராமாயணம் 6596 · யுத்த 5.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குன்றில் வாழ்பவர் - மலைகளிலே வாழும் அரக்கர்கள்; கோடி நாலைந்தினுக்கிறைவன் - இருபது கோடி பேருக்குத் தலைவனும்; இன்றுளார் பினை நாளை இலாரென - இன்று இருப்பவர்கள் பின்பு நாளைக்கு இருக்க மாட்டார்கள் என்னும்படி; எயிற்றால் தின்றுளான் - பற்களால் கடித்துத் தின்று தீர்க்க வல்லவனும்; தேவரைச் செருவின் - தேவர்களைப் போரிலே; நெடும் பல்முறை வென்றுளான் - பலமுறையும் வென்றவனும் ஆகிய; வேள்வியின் பகைஞன் - வேள்விப் பகைவன் என்ற பெயர் கொண்ட; ஓர் வெய்யோன் உளன் - ஒரு கொடியவன் இருக்கிறான்.
ஆங்காங்கு மலைகளிலே வாழ்கின்ற இருபது கோடி அரக்கர்களுக்குத் தலைவன். "இன்றிருப்பவர்கள் நாளைக்கு இல்லை" என்னும்படி எல்லோரையும் கொன்று தீர்க்கும் கொடியவன். தேவர்களைப் பலமுறை வென்றவன். 'வேள்விப் பகைஞன்' என்னும் கொடியவன். 'எக்ஞவிரோதி' என்ற வடமொழிப் பெயரின் தமிழ் வடிவம் இது. 'இன்றுளார் நாளை மாள்வர்' என்பதை இராவணன் கூற்றாகவும் (9125) கம்பர் கூறுவது கருதத்தக்கது 'நெடும் பல்முறை' என்பதற்கு 'பண்டு பல்முறை' என்பதொரு பாடம் உண்டு. அது பொருந்தும். எயிறு - பற்கள் நெடும் - நீண்ட வெய்யோன் - கொடியவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Lord of four times five crores who live in the hills,
- who devoured with his fangs, so that 'those alive today are gone tomorrow',
- who many, many times defeated the gods in battle:
- there is a cruel one, the Enemy of Sacrifice.
What the poem says
This champion, whose name means 'Enemy of Sacrifice' (a Tamil rendering of the Sanskrit Yajñavirōdhi), leads twenty crores of demons who live in the mountains. He devours whole peoples with his teeth, so that those living today are gone by tomorrow, and he has beaten the gods many times.
The commentary notes that Kampaṉ puts the same phrase about 'those alive today dying tomorrow' into Irāvaṇaṉ's own mouth later in the war.