கம்பராமாயணம் 6597 · யுத்த 5.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மண்ணுளாரையும் வானிலுள்ளாரையும் - மண்ணுலகத்தில் உள்ளவர்களையும், விண்ணுலகத்தில் உள்ளவர்களையும்; வகுத்தால் உண்ணும் நாள் ஒரு நாளின் என்று - சேர்த்து வகைப்படுத்தி வைத்தால் அனைத்தையும் உண்ணும்நாள் ஒரு நாள் என்று கூறத்தக்க; ஒளிர்படைத்தானை - ஒளிவீசும் படைக்கலங்களை உடைய சேனை; எண்ணின் நாலிரு கோடியன் - எண்ணினால் எட்டுக் கோடி உடையவனாவான்; எரிஅஞ்ச விழிக்கும் கண்ணினான் - நெருப்பும் அஞ்சுமாறு விழிக்கும் கண்களை உடையவன்; சூரியன் பகை என்றோர் கழலான் உளன் - சூரியன் பகைஞன் என்ற பெயருடைய கழலணிந்த வீரன் ஒருவன் உள்ளான்.
பிறரை அஞ்சச் செய்யும் வெப்பத்தை உடையது நெருப்பு என்றால், அந்த நெருப்பும் அஞ்சும்படி விழிக்கும் கண்களை உடையவன் இந்தச் சூரியன் பகைஞன் (சூரிய விரோதி)
ஆங்கிலம் · English translationAI
Translation
- An army with gleaming weapons, of which one says, 'If you lined up those on earth and those in heaven,
- it would eat them all in a single day',
- eight crores of it, if counted, is his; with eyes whose glare frightens fire itself,
- there is an anklet-wearing hero called the Enemy of the Sun.
What the poem says
Next is the 'Enemy of the Sun' (Cūriyavirōti), a warrior with eight crores of troops bearing shining weapons, an army that could consume everyone on earth and in heaven in a single day. His glare is so fierce that even fire, which makes others afraid, is afraid of him. The anklet (kaḻal) marks him as a warrior hero.