கம்பராமாயணம் 6598 · யுத்த 5.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேவரும் தக்க முனிவரும் - தேவர்களும், தகுதியுடைய முனிவர்களும்; திசைமுகன் முதலா மூவரும் - பிரமன் முதலான மும்மூர்த்திகளும்; பக்கம் நோக்கியே மொழிதர - (நேருக்கு நேராக நின்று பேசுவதற்கு அஞ்சிப்) பக்கம் பார்த்தே பேசுமாறு; முனிவான் - கோபம் உடையவனும், தாவரும் பக்கம் எண் இரு கோடியின் தலைவன் - மிகுந்த வலிமை கொண்ட சேனையின் பதினாலு கோடி பேருக்குத் தலைவனும்; குன்றினும் வலியான் - மலையை விட வலியவனுமான; மாபெரும் பக்கன் என்றுளன் - மாபெரும் பக்கன் என்னும் பெயருடைய ஒருவன் உள்ளான்.
தாவரும் - வலிமை மிக்க பக்கம் - சேனை. பெரும் பக்கன் படைத் தலைவர்களுள் முதன்மை வாய்ந்தவன்; அவனது வலிமையையும், தோற்றத்தையும் குறிப்பிட 'மலையினும் வலியன்' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So wrathful that the gods, the worthy sages, and the Three led by the four-faced one
- speak to him only looking aside,
- lord of eight times two crores in a mighty army,
- there is one called Māperumpakkaṉ, stronger than a mountain.
What the poem says
Māperumpakkaṉ (Mahāpārśvaṉ) is so terrible in his anger that the gods, the great sages, and even the three supreme deities beginning with Piramaṉ dare not face him, and speak to him with their eyes turned aside. He leads sixteen crores of soldiers and is the foremost of the commanders, stronger than a mountain.