கம்பராமாயணம் 6599 · யுத்த 5.41

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உச்சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன்,
நச்சிரப்படை நால் இரு கோடிக்கு நாதன்,
முச்சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு அரும் மொய்ம்பன்,
வச்சிரத்து எயிற்றவன், உளன், கூற்றுவன் மாற்றான்.

பொருள் · Meaning in Tamil

உச்சிரத்து எரி கதிர் என - தலைக்கு மேலே எறிகின்ற சூரியன் என்னும்படி; உருத்து எரி முகத்தன் - சினந்து எறியும் முகத்தை உடையவனும்; நச்சிரப்படை நாலிரு கோடிக்கு நாதன் - சிறந்த தலைமை வாய்ந்த எட்டுக் கோடி பேரைக் கொண்ட படைக்குத் தலைவனும்; முச்சிரத்து அயில் தலைவற்கும் - முக்கவட்டுச் சூலத்தைஉடைய சிவபிரானுக்கும், வெலற்கு அரு மொய்ம்பன் - போரில் வெல்லுதற்கரிய வலிமை உடையவனும்; கூற்றுவன் மாற்றான் - எமனையும் எதிர்த்து நிற்கவல்ல பகைவனுமான; வச்சிரத்தெயிற்றவன் உளன் - வச்சிரதந்தன் என்னும் பெயர் கொண்டவன் இருக்கிறான்.

உச்சிரம் - தலைக்கு மேல் உச்சியில் எரிக்கும் சூரியன் வெப்பம் மிகுதியும் உடையவன். அந்தப் பரிதியை ஒத்து எரியும் முகத்தை உடையவன் என்பதை 'உருத்து எரி முகத்தன்' என்றார். முச்சிரம் - மூன்று கவடுகள். தலைவன் - சிவபிரான். 'கூற்றுவன் மாற்றான்' கூற்றுவனுக்குப் பகைவன். வச்சிரம் போன்ற பற்களை உடையவன் என்பதால் 'வச்சிரத்து எயிற்றவன்' என்றார் 'வச்சிரதந்தன்' என்பது பெயராகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a face that blazes in rage like the sun burning overhead,
  2. lord of eight crores of a choice army,
  3. of a might hard to conquer even for the Lord of the three-pronged spear,
  4. the foe of Death, there is the one with diamond fangs.

What the poem says

This is Vacciratantaṉ, 'Diamond-Tooth', named for teeth hard as the thunderbolt-diamond. His angry face burns like the noonday sun directly overhead. He commands eight crores of picked troops; even Civaṉ, who holds the trident, would find him hard to defeat, and he stands as an enemy to Kūṟṟuvaṉ, the god of death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uc cirattu eri katir eṉa uruttu eri mukattaṉ,
nac cirap paṭai nāl iru kōṭikku nātaṉ,
muc cirattu ayil talaivaṟkum velaṟku aru moympaṉ,
vaccirattu eyiṟṟavaṉ, uḷaṉ, kūṟṟuvaṉ māṟṟāṉ.