கம்பராமாயணம் 6600 · யுத்த 5.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அசஞ்சலப்படை ஐயிரு கோடியன் - பகைவரைக் கண்டு நடுங்காத தன்மையினரான பத்துக் கோடி வீரர்களைக் கொண்ட படையை உடையவனும்; அமரின் வசம் செயாதவன் - போரில் வெல்லப்படாதவன்; தானன்றிப் பிறர் இலாவலியன் - தானேயல்லாது பிறர் எவருமில்லாத வலிமை உடையவனும்; இசைந்த வெஞ்சமத்து - தான் இசைந்து செய்த கொடிய போரில்; இயக்கரை வேரொடும் முன்நாள் பிசைந்து மோந்தவன் - இயக்கர்களை முன் ஒரு காலத்தில் வேருடன் அழியுமாறு கைகளால் பிசைந்து முகர்ந்து பார்த்தவனும், ஒரு பித்தன் - போர் புரிவதே நோக்கமான பைத்தியம் பிடித்தவனுமான; பிசாசன் என்று உளன் - பிசாசன் என்பவன் உள்ளான்.
அசஞ்சலப்படை - பகைவரைக் கண்டு நடுங்காத சேனை. சஞ்சலம் என்ற சொல்லின் எதிர்ப்பதம் 'அசஞ்சலம்' என்பதாகும். பிறர் எவராலும் வெல்லப்படாதவன் என்பதால் 'வசம் செயாதவன்' என்றான். தான் பிறரை வெல்லவல்லவனே அல்லாது இவனை வெல்லவல்லார் பிறர் எவருமில்லை என்னும்படி வலிமை மிக்கவன் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Master of ten crores of an unshaken army, never subdued in battle,
- of a strength matched by no one but himself,
- who once, in a fierce war he chose, crushed the Yakṣas root and all
- and sniffed them: there is a madman called Picācaṉ.
What the poem says
Picācaṉ leads ten crores of troops who never tremble before an enemy. No one has ever beaten him; his only equal is himself. Long ago, in a war he gladly undertook, he wiped out the Iyakkars (Yakṣas) entirely, kneading them in his hands and sniffing at them. He is called a madman because his only passion is fighting.