கம்பராமாயணம் 6601 · யுத்த 5.43

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சில்லிமாப் பெரும் தேரொடும் - சக்கரத்தை உடைய பெரியதேர்ப் படையுடனே; கரி, பரி, சிறந்த வில்லின் மாப்படை - யானை, குதிரை, சிறந்த வில் வீரர்களையுடைய காலாட் படை என்ற; ஏழ் இரு கோடிக்கு வேந்தன் - பதினான்கு கோடிப் பேர் கொண்ட பெரும்படைக்குத் தலைவனும்; கல்லி மாப்படி கலக்குவான் - இந்தப் பெரிய பூமியையேதோண்டி எடுத்துக் கலங்கச் செய்பவனும்; கனல் எனக் காந்திச் சொல்லும் மாற்றத்தன் - தீயைப் போல்கனல் காந்தும்படி பேசும் பேச்சை உடையவனும்; அறம் துறந்தோன் - அறச் செயல்களை நீக்கியவனுமான; துன்முகன் என்று - துன்முகன் என்ற பெயருடைய ஒருவன் உள்ளான்.

சில்லி - தேர்ச் சக்கரம். இந்தப் பெரிய பூமியையும் தோண்டி, கலங்கச் செய்யும் வல்லமை பெற்றவன் என்பதால் 'கல்லி மாப்படை கலக்குவன்' என்றான். கனல் தெறிக்கப் பேசுபவன் என்பதைக் 'கனல் எனக்காந்திச் சொல்லும் மாற்றத்தன்' என்று குறித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. King of fourteen crores: great wheeled chariots, elephants, horses,
  2. and a mighty army of fine bowmen;
  3. he digs up and churns the great earth; his speech
  4. scorches like fire: Tuṉmukaṉ, who has renounced righteousness.

What the poem says

Tuṉmukaṉ ('Evil-Face') commands fourteen crores of chariots, elephants, horses and archers. He can dig up and shake the vast earth, his words burn like live coals, and he has abandoned dharma altogether.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cilli māp perun tēroṭum, kari, pari, ciṟanta
villiṉ māp paṭai ēḻ iru kōṭikku vēntaṉ,
kalli māp paṭi kalakkuvāṉ, kaṉal eṉak kāntic
collum māṟṟattaṉ tuṉmukaṉ eṉṟu aṟam tuṟantōṉ.'