கம்பராமாயணம் 6602 · யுத்த 5.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இலங்கை நாட்டன்ன - இலங்கை நாட்டைப் போன்று, எரிகடல் தீவிடை உறையும் - அலையெறியும் கடல் நடுவே அமைந்த தீவுகளிலே வாழ்கின்ற; அலங்கல் வேற்படை - மாலை சூடிய வேற்படை வீரர்கள்; ஐயிரு கோடிக்கும் அரசன் - பத்துக் கோடி பேருடைய படைக்குத் தலைவனும்; வலம் கொள்வாள் தொழில் - வலிமை மிக்க வாட்போரில் வல்ல; விஞ்சையர் பெரும்புகழ் மறைத்தான் - விஞ்சையரோடு போரிட்டு வென்று, அவர்களது புகழைமறையுமாறு செய்தவனும்; வெயில் உக விழிப்பான் - தீப்பொறி பறக்க விழிப்பவனும்; விலங்கு நாட்டத்தன் என்று உளன் - வீரூபாக்கன் என்ற பெயர் கொண்ட ஒருவன் உள்ளான்.
வாள் வேல் போன்றவைகளை மாலை சூட்டி அலங்கரிப்பதுண்டு. 'இவ்வே பீலியணிந்து மாலை சூட்டி' (புறம் 95) என்ற புறப்பாட்டாலும் இதை அறியலாம். விஞ்சையர் - தேவருள் ஒரு பிரிவினர் விலங்கு நாட்டத்தன் - விரூபாட்சன் என்பதன் தமிழ் ஆக்கமாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- King of ten crores of garlanded spearmen who live
- in islands like the land of Ilaṅkai amid the wave-dashed sea,
- he eclipsed the great fame of the Viñcaiyars, masters of the conquering sword;
- there is Vilaṅkunāṭṭattaṉ, whose glance sheds fiery heat.
What the poem says
Vilaṅkunāṭṭattaṉ, 'he of the slanting eyes', is the Tamil form of Virūpākṣaṉ. He rules ten crores of spearmen from islands like Ilaṅkai scattered over the sea, and he defeated the Viñcaiyars, celestial beings famed as swordsmen, wiping out their renown. His glance throws off sparks.
The garlanded spears reflect an old custom of decorating weapons with garlands, which the commentary illustrates from the Puṟanāṉūṟu.