கம்பராமாயணம் 6603 · யுத்த 5.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாமம் நாட்டிய சவம் எனின் - பிறருக்கு அச்சத்தைத் தரும் வீரர்களின் பிணம் என்றால்; நாள் என்றும் ஒருவர் - அதனைச் சுடலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நாளாயிற்றென்று ஒருவர்; ஈம நாட்டிடை இடாமல் - சுடுகாட்டிலே சென்று புதைக்க விடாமல்; தன் எயிற்றிடை இடுவான் - தன் வாயிலே பெய்து தின்பவனும்; தாமம் நாட்டிய கொடிப் படை - மாலை சூடி, கொடிகளை உடைய சேனை; பதுமத்தின் தலைவன் - பதுமம் என்ற அளவையுடையவற்றின் தலைவனும்; தேவரைத் துரந்தான் - தேவர்களைப் போரில் வென்று விரட்டியவனுமாய; தூம நாட்டத்தன் என்றுளன் - புகைக் கண்ணன் என்ற பெயருடைய ஒருவன் உள்ளான்.
ஈமநாடு - சுடுகாடு. தூமாட்சன் என்ற வடமொழிப் பெயரின் தமிழாக்கமே; 'தூம நாட்டத்தன்' என்பது; புகைக்கண்ணன் எனலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If there is a corpse of a famed warrior, he never lets anyone, saying 'the day has come',
- lay it in the burning ground, but puts it between his own fangs;
- lord of a padma of garlanded, bannered troops,
- there is Tūmanāṭṭattaṉ, who drove off the gods.
What the poem says
Tūmanāṭṭattaṉ, 'Smoke-Eye', is the Tamil form of Dhūmrākṣaṉ. When a dreaded warrior dies, he does not let the body be carried to the cremation ground: he eats it himself. He commands a padma of troops with garlands and banners, and he has routed the gods in battle.