கம்பராமாயணம் 6604 · யுத்த 5.46

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'போரில் மத்தனும், பொருவய மத்தனும், புலவர்
நீரில் மத்து எனும் பெருமையர்; நெடுங் கடற் படையார்;
ஆரும் அத்தனை வலி உடையார் இலை; அவரால்
பேரும், அத்தனை எத்தனை உலகமும்; பெரியோய்!

பொருள் · Meaning in Tamil

பெரியோய் - பெருமைமிக்கவனே; போரின் மத்தனும் பொருவய மத்தனும் - போர்த் தொழில்வல்ல மத்தனும், போரில் வல்லவய மத்தனும் ஆகிய இருவரும்; புலவர் நீரின் மத்து எனும் பெருமையர் - தேவர்கள் பாற்கடலில் இட்ட மத்தாகிய மந்தரமலை என்று சொல்லும் பெருமை உடையவர்கள்; நெடுங் கடற்படையார் - நீண்ட பெரிய கடல் போன்ற படையை உடையவர்கள்; ஆரும் அத்தனை வலியுடையாரிலை - இவர்களுக்கு ஒப்பான வலிமை உடையவர்கள் யாருமே இல்லை; அவரால் அத்தனை எத்தனை உலகமும் பேரும் - இவர்களால் எத்தனை உலகங்கள் உண்டோ அத்தனையும் நிலை பெயர்ந்து கெட்டழிந்து போகும்.

'போரின் மத்தன், பொருவயமத்தன்' என்னுமிருவரும் இரட்டையர் போலும். பகைக்கடலைக் கலக்கும் மத்துப் போன்றவராதலின் இப் பெயர் பெற்றனர் போலும். புலவர் - தேவர்கள். நீர் - கடல் இங்கு பாற்கடலைக் குறித்தது. தேவர்களாகிய பாற்கடலைக் கடைந்து கலங்கச் செய்யும் மத்துப் போன்றவர் என்பது கருதத்தக்கது பேரும் நிலை பெயர்ந்து. பெருமை மலை போன்றதாகிய உடற் பெருமை என்பதால் 'பெருமையோர்' என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Mattaṉ of battle and Vayamattaṉ, mighty in fight, are as great
  2. as the churning-stick the gods set in the sea; they have armies vast as the sea;
  3. no one has strength like theirs; by them
  4. every world there is, however many, would be shaken loose, O great one!

What the poem says

Two warriors, apparently twins, named Mattaṉ and Vayamattaṉ: the names echo 'mattu', a churning-stick. They are compared to Mount Mantaram, which the gods used to churn the ocean of milk; just so these two churn up the sea of their enemies. Their armies are like the ocean, and they could dislodge every world in existence.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pōriṉ mattaṉum, poru vayamattaṉum, pulavar
nīriṉ mattu eṉum perumaiyar; neṭuṅ kaṭaṟ paṭaiyār;
ārum attaṉai vali uṭaiyār ilai; avarāl
pērum, attaṉai ettaṉai ulakamum; periyōy!