கம்பராமாயணம் 6616 · யுத்த 5.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உண்ணும் செய்கை அத் தசமுகக் கூற்றம் - உயிரை உண்ணும் படியான செயலை உடைய பத்து முகங்களை உடைய இராவணன் என்னும் கூற்றமானது; தன் உயிர் மேல் நண்ணும் செய்கையதெனக் கொடு - தன்னுயிரையும் கவர வருதல் செய்யும் என்றுஎண்ணி; புண்ணும் செய்தது முதுகு என - எனது முதுகையும் புண் செய்து விட்டது என்று; புறம் கொடுத்து ஓடி - புறமுதுகு காட்டி ஓடித் தப்பித்து; நாள் தொறும் தன்நாள் எண்ணும் செய்கையன் - தனது இறுதி நாளைப் பற்றி நாள் தோறும் நினைக்கும் செய்கையனாய்; அந்தகன் தன் பதம் இழந்தான் - எமன் தனது தென்திசைக் காவல் பதவியையும் இழந்தான்.
எமனுக்கும் இறுதியைச் செய்யும் எமனாக இராவணன் விளங்கினான் என்பதால் "தசமுகக் கூற்றம்" என்றான். இராவணனால் அடியுண்டு புறம் காட்டி ஓடிய எமன் 'தசமுகக் கூற்றம் இனி வரும் நாள் நமது இறுதி நாள்' என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான் என்பது செய்தி இராவணனால் உயிர்களைக் கொல்லும் தனது தொழிலை இழந்தான் என்பதால் 'அந்தகன் தன் பதம் இழந்தான்' என்றான். தென்திசையில் இராவணன் வாழ்தலால், அங்குச் செல்ல அஞ்சிய அந்தகன் தென் திசைக் காவலை இழந்தான் எனவுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying 'He has even wounded my back', he turned tail and ran;
- thinking 'That ten-faced Death, whose work is devouring, will come
- for my own life', he counts his own days, day after day:
- Antakaṉ, Death himself, has lost his office.
What the poem says
Even Yamaṉ, the god of death (Antakaṉ), was beaten. Wounded in the back as he fled, he now lives in fear that Irāvaṇaṉ, a 'ten-faced Death' who devours lives, will come for him next, and he counts the days left to him as a mortal would.
So Yamaṉ has lost his post: either his work of taking lives, now done by Irāvaṇaṉ, or his guardianship of the south, the direction he rules, where Ilaṅkai lies and where he no longer dares to go.