கம்பராமாயணம் 6617 · யுத்த 5.59

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இருள் நன்கு ஆசு அற, எழு கதிரவன் நிற்க; என்றும்
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை, மண்டு அமரில்
பருணன் தன் பெரும் பாசமும் பறிப்பு உண்டு, பயத்தால்
வருணன் உய்ந்தனன், மகர நீர் வெள்ளத்து மறைந்து.'

பொருள் · Meaning in Tamil

இருள் நன்கு ஆசற - இருள் நன்றாக விலகும்படி; எழு கதிரவன் நிற்க - கீழ்த்திசையில் எழும் சூரியன் இருக்கட்டும்; என்றும் அருணன் கண்களும் - சூரியனுடைய தேரில் சாரதியாக முன்னால் அமர்ந்திருக்கும் அருணனது கண்களும் கூட; கண்டிலா இலங்கை - பார்த்திராதது இலங்கை நகர்; பண்டு அமரில் - முன்பு இராவணனுடன் செய்த போரிலே; பருணன்தன் பெரும் பாசமும் பறிப்புண்டு - திறமை உடையவன் என்றாலும் தனது படையாகிய பாசம் பறிக்கப்பட; பயத்தால் - இராவணனைப்பற்றிய அச்சத்தினாலே; மகர நீர் வெள்ளத்து - மகரமீன்களை உடைய கடல் நீரிலே; மறைந்து வருணன் உய்ந்தனன் - மறைந்து வருணன் தப்பிப் பிழைத்தான்.

இராவணன் வருணனை வென்றது கூறப்பட்டுள்ளது. இராவணனுடன் நிகழ்ந்த போரில் தோற்றுத் தனது படையான பாசத்தைப் பறி கொடுத்து விட்டுக் கடலில் சென்று மறைந்தான் வருணன் என்பது கருத்து. பருணன் - திறமுள்ளவன். ஆசற - சிறிதும் இல்லாதபடி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Let alone the rising sun that drives the darkness wholly away,
  2. Ilaṅkai has never been seen even by the eyes of Aruṇaṉ; and long ago in battle
  3. the skilled one had his great noose torn from him, and in fear
  4. Varuṇaṉ saved himself by hiding in the flood of the makara-filled sea.

What the poem says

The sun does not dare to shine over Ilaṅkai; not even Aruṇaṉ, the sun's charioteer who rides out in front, has ever set eyes on it.

Vīṭaṇaṉ then tells of Varuṇaṉ, god of the waters: in a battle with Irāvaṇaṉ, capable warrior though he was, he had his weapon, the noose, snatched away, and he escaped only by hiding in the ocean among its sea monsters.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iruḷ naṉku ācu aṟa, eḻu katiravaṉ niṟka; eṉṟum
aruṇaṉ kaṇkaḷum kaṇṭilā ilaṅkai, paṇṭu amaril
paruṇaṉtaṉ perum pācamum paṟippuṇṭu, payattāl
varuṇaṉ uyntaṉaṉ, makara nīr veḷḷattu maṟaintu.'