கம்பராமாயணம் 662 · பால 10.110
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மைந்த - இளைஞனான இராமனே! மலருளோன் மைந்தன் - பிரமதேவன் மகனான வசிட்டன்; வழங்கிய சாபம் தன்னால் - இட்ட சாபத்தால்; அரசர் கோமான் - அரசர் தலைவனான திரிசங்கு; அலரியோன் தானும் - கதிரவனும்; நாணும் வடிவு இழந்து - வெட்கப்படுமாறு இருந்த தன் அரச வடிவத்தை நீங்கி; புலரி அம் கமலம் போலும் - உதய காலத்தில் மலர்கின்ற தாமரை போன்ற; வதனம் பொலிவு ஒரீஇ - திருமுகத்தின் அழகு கெட்டு; பூவில் பலரும் - பூவுலகில் எல்லோரும்; இகழ்தற்கு ஒத்த படிவம் - இகழ்தற்கரிய சண்டாள வடிவம்; ஆங்கு அன்றே - அவ்வரசனுக்கு அந்த இடத்தில் அப்போதே; வந்து உற்றது - வந்து அடைந்தது.
திரிசங்கு தன்மேனி முகப்பொலிவு யாவும் நீங்கிச் சண்டாள வடிவத்தை அடைந்தான். அலரி: ஆயிரம் கதிர்களால் விளங்குபவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Young one! By the curse pronounced by the son of him who sits in the flower,
- the king of kings lost a form that put even the sun to shame;
- his face lost its glow, like a lotus at dawn,
- and there and then a shape came upon him fit for all on earth to scorn.
What the poem says
Catāṉantaṉ, addressing Irāmaṉ, describes the effect of the curse laid by Vaciṭṭaṉ, son of Brahmā. Tiricaṅku, whose royal beauty once outshone the sun, loses his radiance on the spot; his lotus-bright face fades, and he takes on the form of an outcaste whom everyone despises.