கம்பராமாயணம் 663 · பால 10.111

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காசொடு - மணி மாலைகளும்; முடியும் - கிரீடமும், பூணும் - மற்ற அணிகளும்; கரியது ஆம் - கரும் பொன்னான; கனகம் போன்றும் - இரும்பை ஒத்தும் (கறுத்த நிறத்தை அடைந்தும்); தூசொடும் - உடுத்த ஆடைகளும்; அணியும் முந்நூல் - தரித்த முப் புரிநூலும்; தோல்தரும் - தோலால் ஆன; தோற்றம் போன்றும் - தன்மையை ஒத்தும்; மேனி - உடம்பானது; மாசொடு கருக - அழுக்குடன் கூடிக் கறுத்து; வனப்பு அழிந்திட - அழகு கெட (திரிசங்கு); ஊர் வந்தான் - தனது நகரம் சேர்ந்த அளவில் (அப்போது); சீசி என்று - சீச்சீ என்று; யாரும் எள்ள - எல்லாரும் தன்னை இகழ்தலால்; திகைப்பொடு - கலக்கத்தோடு; பழுவம் சேர்ந்தான் - காட்டை அடைந்தான்.

பூண்ட அணிகலன்கள் இரும்பினால் இயன்றனவாகவும், உடுத்த உடையும் பூணூலும் தோலாகவும் மாறவும், உடல் கருகித் தோன்றவும் திரிசங்கு முன்னை வடிவம் நீங்கிச் சண்டாள வடிவோடு அயோத்தி சேர்ந்தான். அப்போது அவனைக் கண்டு யாவரும் இகழ்ந்தனர். அது பொறாத அவன் காடு சேர்ந்தான். கரியது ஆம் கனகம் - கரும்பொன் - இரும்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His necklaces, crown and ornaments like gold that has turned black,
  2. his clothes and the sacred thread he wore taking on the look of leather,
  3. his body blackened with grime and its beauty ruined, he came to his city;
  4. when all mocked him crying 'Chee, chee!', he went in bewilderment to the forest.

What the poem says

The curse transforms everything about Tiricaṅku: his jewels and crown turn to iron, which the poet calls "black gold"; his silk garments and sacred thread become leather; his body is darkened and grimy. When he returns to Ayōtti, everyone jeers at him in disgust, and, unable to bear it, he wanders off into the forest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kācoṭu muṭiyum pūṇum kariyatām kaṉakam pōṉṟum,
tūcoṭum aṇiyum munnūl tōl tarum tōṟṟam pōṉṟum,
mācoṭu karuki mēṉi vaṉappu aḻintiṭa ūr vantāṉ,
'cīci' eṉṟu yārum eḷḷat, tikaippoṭu paḻuvam cērntāṉ.