கம்பராமாயணம் 664 · பால 10.112
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கானிடை - வனத்திலே; சிறிது வைகல் கழித்து - சில நாட்களைப் போக்கி; ஓர் நாள் - ஒரு நாள்; கௌசிகன் பேர் கோன் - கௌசிகன் என்ற நாமம் பெற்ற இவ்வரசன்; இனிது உறையும் - இனிதாகத் (தவம் செய்வது) வசிக்கிற; சோலை குறுகினன் - சோலையைத் (திரிசங்கு) நாடிச் சேர்ந்தான்; குறுக - அணுகிய அளவில்; அன்னான் - அக்கௌசிகன்; ஈனன் நீ யாவன் - சண்டாளனான நீ யார்; இவ் இடையின் நேர்ந்தது என்னை - இந்த இடத்திற்கு வந்ததன் காரணம் என்ன; என்ன - என்று வினவ; வேந்தன் - திரிசங்கு; வணங்கி - (கௌசிகனை) வணங்கி, மேல் நிகழ் பொருள்கள் - முன் நடந்த செய்திகள்; எல்லாம் விளம்பினன் - அனைத்தையும் சொன்னான்.
வசிட்டனுக்குப் பகைவன் விசுவாமித்திரன் என்று கருதித் திரிசங்கு அவ் விசுவாமித்திரனை அடைந்தான். மேல் நிகழ் பொருள்கள்: வசிட்ட சாபம் முதலியன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- After spending some days in the forest, one day he came
- to the grove where the king named Kaucikaṉ dwelt at ease; as he approached, that one said,
- 'Who are you, outcaste? What brings you to this place?'
- and the king bowed and told him all that had happened.
What the poem says
After some days in the wilderness, Tiricaṅku comes to the grove where Kaucikaṉ is doing penance, choosing him because he is Vaciṭṭaṉ's known rival. Kaucikaṉ asks who this outcaste is and why he has come, and the king, bowing, tells him the whole story of his request and the curse.