கம்பராமாயணம் 665 · பால 10.113

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இற்று தோ' என நக்கு, அன்னான், 'யான் இரு வேள்வி முற்றி
மற்று உலகு அளிப்பென்' என்னா, மாதவர் தம்மைக் கூவச்,
சுற்று உறு முனிவர் யாரும் தொக்கனர்; வசிட்டன் மைந்தர்,
'கற்றிலம், அரசன் வேள்வி கனல் துறை புலையற்கு ஈவான்'

பொருள் · Meaning in Tamil

அன்னான் - அதுகேட்ட கோசிகன்; இற்றதோ என - இவ்வளவுதானா என்று இகழ்ச்சியாகச் சொல்லி; நக்கு - சிரித்து; யான் இருவேள்வி - நான் பெரியதொரு வேள்வியை; முற்றி - (உனக்காக) செய்து முடித்து; உலகு அளிப்பென் என்னா - வான் உலகத்தைத் (இந்த உடம்பொடு அடைய) தந்திடுவேன் என்று சொல்லி; மாதவர் தம்மைக் கூவ - மாதவ முனிவர்களை அழைக்க; சுற்றுறு முனிவர் யாரும் - சுற்றுப் பக்கங்களில் உள்ள அம்முனிவர் அனைவரும்; தொக்கனர் - (அங்கே வந்து) கூடினார்கள் (அப்போது); வசிட்டன் மைந்தர் - வசிட்ட குமாரர்கள்; அரசன் புலையற்கு - அரசன் ஒருவன் சண்டாளன் ஒருவனுக்காக; கனல்துறை - அக்கினியிலே; வேள்வி - வேள்வியை; ஈவான் - முடித்துத் தருவதை; கற்றிலம் - (நாங்கள் எந்த நூலிலும்) படித்து அறிந்தோம் இல்லை.

மற்று உலகு: இவ் வுலகினும் வேறாகிய உலகம்: சுவர்க்கம். நூற்கொள்கைக்கு மாறாக அரசனான விசுவாமித்திரன் வேள்வி செய்யப் புரோகிதன் ஆதலும், யாகம் செய்யும் தலைவனாகச் சண்டாளன் அமைதலும் தகாத செயல்கள் ஆதலால் வசிட்ட குமாரர் கௌசிகன் அழைப்பை ஏற்கவில்லை எனலாம். நகுதல் - வசிட்டனை இகழ்தல் காரணமாகப் பிறந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Is that all?' he laughed, and saying, 'I will complete a great sacrifice
  2. and give you the other world,' he summoned the great ascetics;
  3. all the sages round about assembled; but Vaciṭṭaṉ's sons said,
  4. 'We have never learned of a king who offers a sacrifice in the fire for an outcaste' —

What the poem says

Kaucikaṉ laughs scornfully at Vaciṭṭaṉ's refusal and promises to perform a sacrifice that will send Tiricaṅku to heaven. He summons the sages of the region, and they gather, but Vaciṭṭaṉ's sons object: no scripture they know allows a king to act as priest, or an outcaste to be the patron of a sacrifice. Their speech runs on into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṟṟatō' eṉa nakku, aṉṉāṉ, 'yāṉ iru vēḷvi muṟṟi
maṟṟu ulaku aḷippeṉ' eṉṉā, mā tavar tammaik kūvac,
cuṟṟuṟu muṉivar yārum tokkaṉar; vaciṭṭaṉ maintar,
'kaṟṟilam, aracaṉ vēḷvi kaṉaltuṟai pulaiyaṟku īvāṉ'