கம்பராமாயணம் 6620 · யுத்த 5.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எம் குலத்தவர் எண் பதினாயிரர் - எமது அரக்கர் குலத்தில் பிறந்தவர்கள் எண்பதினாயிரம் பேர்களும்; இறைவர் - அவர்களுக்குத்தலைவர்களான; கிங்கரப் பெயர் கிரியன்ன தோற்றத்தர் - கிங்கரர் என்னும் பெயருடைய மலை போன்ற தோற்றத்தவரும் ஆகி; கிளர்ந்தார் - அனுமனுடன் போரிடப் பொங்கி எழுந்தவர்களை; வெங்கரத்தினும் - அனுமான் தனது வலிய கைகளினாலும், காலினும், வாலினும் - கால்களாலும் வாலினாலும்; வீக்கி - இறுகப் பிணித்தமையால்; சங்கரற்கு அழி - சிவ பெருமானாலே அழிந்துபோன; முப்புரத்தவர் எனச் சமைந்தார் - திரிபுரத்து அரக்கர்களைப் போல முடிந்தனர்.
கிங்கரர்களை அனுமன் கைகளாலும் கால்களாலும் வாலாலும் பிணித்து அழித்தான் என்க. சிவபிரானால் அழிந்த திரிபுரத்தவர் அனுமனால் அழிந்த கிங்கரருக்கு உவமையாம். சமைதல் - அழிதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Eighty thousand of our race, chieftains,
- named Kiṅkarars, mountains to look at, rose up;
- he crushed them with his fierce hands, his feet and his tail,
- and they were finished like the people of the Three Cities destroyed by Caṅkaraṉ.
What the poem says
'Our race' reminds us that the speaker, Vīṭaṇaṉ, is himself a rākṣasa. Eighty thousand Kiṅkarars, mountain-like demon chieftains, rose to fight Aṉumaṉ, and he crushed them with his hands, feet and tail. They perished as completely as the demons of the Three Flying Cities whom Civaṉ (Caṅkaraṉ) burned.