கம்பராமாயணம் 6621 · யுத்த 5.63

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெம்பும் மாக் கடல் சேனை கொண்டு எதிர்பொர வெகுண்டான்,
அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி
உம்பர் வானகத்து ஒரு தனி நமனைச் சென்று உற்றான்,
சம்பு மாலியும், வில்லினால் சுருக்குண்டு தலைவ!

பொருள் · Meaning in Tamil

தலைவ - தலைவனே! சம்பு மாலியும் - சம்புமாலி என்ற அரக்கர் தலைவனும்; வெம்பும் மாக்கடல் சேனைகொண்டு - சினம் மிக்க பெரியகடல் போன்ற படையைக் கொண்டு; எதிர் பொர வெகுண்டான் - அவனை எதிர்த்துப் போர் செய்யச் சினம் கொண்டு வந்தான்; அம்பும் ஆயிரத்து ஆயிரம் - ஆயிரம் ஆயிரம் அம்புகளை விட்டு; இவன் புயத்து அழுத்தி - இந்த அனுமன் புயத்திலே அழுந்தச் செய்து; வில்லினால் சுருக்குண்டு - அவன் கை வில்லினாலேயே அனுமனால் சுருக்கிடப்பட்டு; உம்பர் வானத்து - தேவர்கள் வாழும் விண்ணுலகுக்கு; ஒருதனி நமனைச் சென்று உற்றான் - தனி ஒருவனாக எமனைச் சென்று அடைந்தான்.

வெம்பு - வெகுளும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a seething, sea-vast army he came in fury to fight him,
  2. drove a thousand thousand arrows into this one's shoulders,
  3. and went alone to meet Death in the heaven above:
  4. Campumāli too, strangled with his own bow, O lord!

What the poem says

Campumāli, a demon commander, attacked Aṉumaṉ with an army like a raging sea and drove countless arrows into his shoulders. Aṉumaṉ strangled him with the string of his own bow, and Campumāli went off alone to meet Yamaṉ. 'This one' points to Aṉumaṉ, who is present as Vīṭaṇaṉ speaks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vempu māk kaṭaṟ cēṉai koṇṭu etir pora vekuṇṭāṉ,
ampum āyirattu āyiram ivaṉ puyattu aḻutti
umpar vāṉakattu oru taṉi namaṉaic ceṉṟu uṟṟāṉ,
campumāliyum, villiṉāl curukkuṇṭu talaiva!