கம்பராமாயணம் 6622 · யுத்த 5.64

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'சேனைக் காவலர் ஒர் ஐவர் உளர், பண்டு தேவர்
வானைக் காவலும் மானமும் மாற்றிய மறவர்,
தானைக் கார்வருங் கடலொடும், தமரோடும், தாமும்,
யானைக் கால்பட்ட செல் என, ஒல்லையின் அவிந்தார்.

பொருள் · Meaning in Tamil

சேனைக்காவலர் ஓர் ஐவர் உளர் - இராவணனது சேனையின் காவலர் ஐந்து பேர் உள்ளனர் (பஞ்சசேனாதிபதிகள்); பண்டு தேவர் வானை - முன்பு தேவர்களின் வானுலகத்தை; காவலும் மானமும் மாற்றிய மறவர் - பாதுகாப்பையும், மானத்தையும் மாற்றியவீரர்கள்; தானைக் கார்க் கரும் கடலொடும் - படையாகிய கரிய பெரிய கடலுடனே; தமரொடும் தாமும் - தமது உறவினருடனே தாங்களும் (அனுமனுடன் போரிட வந்தவர்கள்); யானைக் கால்பட்ட செல்என - யானையினது கால்களில் மிதிபட்ட கறையானைப் போல; ஒல்லையின் அவிந்தார் - விரைந்து அழிந்து போயினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There were five guardians of the army, warriors who once
  2. stripped the gods' heaven of its defence and its honour;
  3. with their dark sea of troops, with their kin, they themselves
  4. were snuffed out in a moment, like termites under an elephant's foot.

What the poem says

Next came Irāvaṇaṉ's five generals, the Pañcasēṉāpatis, warriors who had once broken the defences and pride of the gods' heaven. They attacked Aṉumaṉ with their sea-like army and their kinsmen, and were wiped out at once, like termites trodden under an elephant's foot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cēṉaik kāvalar ōr aivar uḷar, paṇṭu tēvar
vāṉaik kāvalum māṉamum māṟṟiya maṟavar,
tāṉaik kārak karuṅ kaṭaloṭum, tamaroṭum, tāmum,
yāṉaik kāl paṭṭa cel eṉa, ollaiyiṉ avintār.