கம்பராமாயணம் 6623 · யுத்த 5.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காய்த்த அக்கணத்து - அனுமனை) சினமடையச் செய்த அந்தக் கணத்திலே; அரக்கர்தம் உடல் உகு - அந்த அரக்க வீரர்களின் உடலில் இருந்து சிந்தும்; கறைத்தோல் - இரத்தமும் அவர்களின் உடல் தோல்களும்; நீத்த எக்கரின் - கடற்கரையிலுள்ள மணல் திட்டுக்களைப் போல; நிறைந்துள கருங்கடல் - எங்கும் கரிய கடலாக நிறைந்துள்ளனவாயின்; நெருப்பின் வாய்த்த அக்கனை - நெருப்பென வெகுண்டு வந்த இராவணன் மகனான அட்சய குமாரனை; வரி சிலை மலையொடும் வாங்கி - கட்டமைந்த வில்லாகிய மலையோடு இழுத்து வாங்கி; தேய்த்த அக்குழம்பு - காலால் தேய்த்த அக்குழம்பு; இலங்கையின் தெருவில் உலர்ந்தில - இலங்கை வீதியிலே இன்னும் உலரவில்லை.
"விண்ணொடு மண்காணத் தேய்த்தான்" என, இச்செய்தி சுந்தரகாண்டத்துள் (5705) கூறப்பட்டுள்ளது. 'எம்பியோ தேய்ந்தான் எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது' (5721) என இந்திரசித்து வாய்மொழியாகவும் வரும். அட்சய குமாரனை உருத் தெரியாமல் தேய்ந்த அக்குழம்பு இலங்கை வீதியிலே இன்னும் உலராமல் இருக்கிறது என்பான் 'இலங்கையின் தெருவில் உலர்ந்தில' என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The bloodied skins shed from the bodies of the demons of that troop he had angered
- lie piled like sandbanks left by the tide; and the paste
- of Akkaṉ, who came like fire of the black sea, whom he seized together with his banded, mountain-like bow
- and ground down, has not yet dried in the streets of Ilaṅkai.
What the poem says
Vīṭaṇaṉ tells of the slaughter after Aṉumaṉ was roused: the blood and skins of the demons lie heaped like sandbanks on the shore. Worst of all was the fate of Akkaṉ (Akṣakumāraṉ), Irāvaṇaṉ's young son, who came at Aṉumaṉ blazing like fire. Aṉumaṉ seized him along with his great bow and ground him into the street with his foot, and that paste has still not dried.
The commentary points back to the Cuntara Kāṇṭam, where this killing is told and Intiracittu laments that with his brother 'our father's fame was ground away'.