கம்பராமாயணம் 6624 · யுத்த 5.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சொன்னமாமதில் - ஏற்கனவே கூறியபடி அமைந்த பெரிய மதில்களால்; இலங்கையின் பரப்பினில் - இலங்கை நகரின் பரப்பினுள்; துகைத்துச் சன்னமானவர் - அனுமன் காலால் துகைக்கப்பட்டுச் சன்ன பின்னமான அரக்கர்; கணக்கிலர் யாவரே தெரிப்பார் - கணக்கற்றவர் என்பதையார் தெரிந்துரைக்கவல்லார்; இன்னம் யாருளர்வீரர் - இன்னும் இலங்கையிலே வீரர்கள் யாருள்ளனர்?; மற்று இவன் சுட எரிந்த - இந்த அனுமன் வைத்த தீயினால் எரிந்த; அன்ன மாநகர் - அந்தப் பெரிய இலங்கை நகரம்; அக்குருதியால் அவிந்தது - அனுமனால் சின்னமானவர்கள் சிந்திய இரத்தத்தால் அணைந்து போயிற்று.
சொன்ன - ஏற்கனவே விவரித்துக் கூறிய சொன்ன - சொர்ணம் பொன்மதில் என்றுமாம் துகைத்து - காலால் மிதித்து 'மற்று' வினை மாற்றுப் பொருளில் வந்த இடைச்சொல். இலங்கையில் அனுமனால் கொல்லப் படாது தப்பியவரே இல்லை என்பது உயர்வு நவிற்சி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Within the spread of Ilaṅkai with its great walls I spoke of, those trampled
- and torn to bits are beyond counting: who could reckon them?
- What heroes are left there now? Yet that great city, which burned
- when this one set it alight, was not quenched by that blood.
What the poem says
Inside the vast walled city, those Aṉumaṉ trampled to shreds are past counting; hardly a warrior remains. Yet the fire Aṉumaṉ lit was not put out even by all the blood that was spilled. 'The walls I spoke of' can also be read as 'walls of gold'. The claim that no one escaped is deliberate hyperbole.