கம்பராமாயணம் 6625 · யுத்த 5.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அலங்கல் மாலையும் சாந்தமும் - அணிந்த மாலையும்; பூசிய சந்தனமும்; அச் சாத்தியதுகிலொடும் - அணிந்திருந்த அந்த ஆடையோடும்; கதிர்வாள் இலங்கை வேந்தனும் - ஒளிரும் வாளை உடைய இலங்கை வேந்தனான இராவணனும்; ஏழுநாள் விசும்பிடை இருந்தான் - ஏழுநாட்கள் வானிலேயே தங்கியிருந்தான் என்றால், விலங்கல் வெந்தவா - இலங்கைக்கு ஆதாரமாயிருந்த திரிகூடமலை அனுமன் வைத்த தீயால் வெந்ததை; வேறுஇனி விளம்புவது எவனோ - இனித்தனியாக விளம்பவும் கூடுமோ?.
சிவபிரான் தந்தவாள் இருந்தும் இலங்கையைத் தீக்கு இரையாக்கிய அனுமனை இராவணனால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை 'கதிர்வாள் இலங்கை வேந்தன்' என்பதுணர்த்தும். கலம் - அணிகலம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- How the mountain burned, what more is there to say?
- In the garland and sandal paste he had put on that day,
- with his jewels and the very cloth he was wearing, even the king of Ilaṅkai
- with the shining sword stayed seven days up in the sky!
What the poem says
The fire was so great that Irāvaṇaṉ himself, still in the garland, sandal paste, jewels and clothes he had on that day, took refuge in the sky for seven days. If that is so, there is no need to describe how Tirikūṭam, the mountain on which Ilaṅkai stands, burned. Mentioning his shining sword, Civaṉ's gift, underlines that for all his power he could do nothing against Aṉumaṉ.