கம்பராமாயணம் 6626 · யுத்த 5.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நொதுமல் திண் திறல் அரக்கனது - வலிய, திண்ணிய, ஆற்றலை உடைய அரக்கனான இராவணனது; இலங்கையை நுவன்றேன் - இலங்கையின் வரலாறு பற்றிக் கூறினேன்; அதுமற்றவ்வழி அரணமும் - அதுவல்லாது இலங்கையின் மதிலைப் பற்றியும்; பெருமையும் அறைந்தேன் - இராவணனது பெருமையும் சொன்னேன்; இது மற்றவ் வழி எய்தியது - இந்த அனுமனது செய்தி அங்குநடந்தது (அதனையும் சொன்னேன்); இராவணன் ஏவ - இராவணன் கட்டளை இட; பதுமத்து அண்ணலே - தாமரை மலரில் வசிக்கும் பிரமதேவனே; பண்டுபோல் அந்நகர் படைத்தான் - முன்பு போலத் திகழும்படி அந்த நகரத்தைப் படைத்தான்.
நொதுமல் - வலிமை. இராவணது வலிமையும், திறமையும் தோன்ற 'நொதுமல் திண்திறல் அரக்கன்' என்றான். இலங்கையின் தோற்றம், அமைப்பு போன்றவற்றைக் கூறினேன் என்பதை 'இலங்கையை நுவன்றேன்' என்றான் 'இது' என்பது இந்த அனுமன் செயல். பதுமத்து அண்ணல் - தாமரையில் வீற்றிருக்கும் தலைவன் (பிரமன்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- I have told of the Ilaṅkai of the mighty, strong demon;
- I have told, too, of its defences there and his greatness;
- this is what happened there; and at Irāvaṇaṉ's command
- the lord of the lotus himself created that city again as it was before.
What the poem says
Vīṭaṇaṉ sums up: he has described Ilaṅkai, its walls, Irāvaṇaṉ's might, and what Aṉumaṉ did there. He ends with a sobering fact: after the burning, Piramaṉ, the god seated on the lotus, rebuilt the city exactly as it had been, on Irāvaṇaṉ's order. The city Rāmaṉ faces is whole again.