கம்பராமாயணம் 6629 · யுத்த 5.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீர - வீரம் மிக்கவனே!; கூட்டினார் படை பாகத்தின் மேற்படக் கொன்றாய் - இலங்கையில் இராவணன் கூட்டிவைத்திருந்த படையில் பாதிக்கு மேல் நீயே கொன்று தீர்த்தாய்; எரி ஊர் முழுதும் ஊட்டினாய் - இலங்கை நகர் முழுவதும் தீமூட்டி அழியச் செய்தாய்; இனி, அங்கு ஒன்று உண்டோ - இனி அங்கு நான் செய்ய வேண்டியது ஏதேனும் ஒன்று உள்ளதோ?; கேட்ட ஆற்றினால் - வீடணன் கூறக் கேட்ட செய்திகளால்; கிளிமொழிச் சீதையை - கிளி போன்ற மொழிகளை உடைய சீதா தேவியை; கிடைத்தும் மீட்டிலாதது - நேரில் பார்க்கக் கிடைத்தும் கூட நீ மீட்டு வராதது; என் வில் தொழில் காட்டவோ - நான் எனது வில்லாற்றலைக் காட்ட வேண்டும் என்பதற்காகவோ?
கூட்டினார் - திரட்டி வைத்தவர்கள். பாகம் - பாதி. மேற்பட - மேலாக. சீதையை நேரில் காணக் கிடைத்தும் பேராற்றல் உள்ள நீ மீட்டுவரக்கூடிய வலிமை இருந்தும், மீட்டு வராதது என் வில்தொழில் காட்டவோ என இராமபிரான் அனுமனைப் புகழ்ந்தான். கிளி மொழி - உவமைத் தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You killed more than half the army they had gathered;
- you fed the whole city to the fire: is anything left to do there now?
- From what I have heard, though you found Cītai of the parrot-like speech,
- was it only to let me show the work of my bow that you did not bring her back, O hero?
What the poem says
Rāmaṉ praises Aṉumaṉ. He killed more than half of Irāvaṇaṉ's assembled army and burned the whole city, so what is there left for Rāmaṉ to do? Having heard Vīṭaṇaṉ's account, Rāmaṉ playfully asks whether Aṉumaṉ, who found Cītai and was strong enough to carry her back, left her there only so that Rāmaṉ might have a chance to show his skill with the bow.