கம்பராமாயணம் 6630 · யுத்த 5.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொன் செய் தோளினாய் - பொன்னாலமைந்தது போன்ற தோள்களை உடையவனே; நின் செய் தோள் வலி நிரம்பிய - உனது தோள்கள் புரிந்த ஆற்றலே எங்கும் நிறைந்துள்ள; இலங்கையை நேர்ந்தோம் - இலங்கையை நாங்கள் அடைந்தோம்; பின் செய்தோம் சில - எங்கள் வலிமையைக் காட்டி பின் சில போர்கள் செய்தோம்; அவை இனிப் பீடு ஒன்று பெறுமோ - அப்படி நாங்கள் செய்யும் போர் முதலிய வீரச் செயல்கள் ஒரு பெருமை பெறுமோ?; போர்ப் பெரும் படையொடும் புக்கோம் - போர்த் தொழில் வல்ல பெரும்படையுடன் நாங்கள் புகுந்துள்ளோம்; என் செய்தோம் என்று - என்ன பெரிய செயலைச் செய்து விட்டோம் என்று; பெரும்புகழ் எய்துவான் இருந்தோம் - பெரிய புகழ் அடைய இருந்தோம்.
கிடைத்தற்கரியது பொன்; பெருமைக்குரிய அனுமன் தோள்களை 'பொன் செய்தோள்' என்றார். இலங்கையில் எல்லா இடங்களிலும் அனுமானது தோளாற்றலைப் பற்றிய பேச்சாகவே இருப்பதால் 'நின் செய்தோள் வலி நிரம்பிய இலங்கை' என்றார் உனக்குப் பின் சென்று நாங்கள் என்ன பெருமை அடையப் போகிறோம் என்பதை 'இனிப் பீடு ஒன்று பெறுமோ' என்றார்; இனி நாங்கள் எதைச் செய்து புகழ் எய்த இருக்கிறோம் என அனுமனைப் புகழ்ந்தான் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- We have come to an Ilaṅkai filled with the might your shoulders wrought;
- if we do a few things after you, will they win any glory now?
- O you with shoulders as if made of gold! We have come with a great army for war;
- for doing what were we to win great fame?
What the poem says
Rāmaṉ continues his generous praise. All Ilaṅkai is full of talk of Aṉumaṉ's strength. Whatever Rāmaṉ and his army do there now, coming after Aṉumaṉ, can win them little glory: what great deed is left by which they might become famous? Aṉumaṉ's shoulders are called 'golden' because they are precious and admirable.