கம்பராமாயணம் 6633 · யுத்த 6.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எண்ணுநூல்கற்றாய் - மதிக்கத்தக்க நல்ல நூல்களைக் கற்றுணர்ந்தவனே! தொடக்கும் என்னில் - இந்தக் கடல் நமது கட்டுக்கு உட்படுமானால்; இவ்வுலகு ஒரு மூன்றையும் - இந்த மூன்று உலகங்களையும்; தோளால் அடக்கும் வண்ணமும் - நமது தோள்களாலே அடக்கும் வண்ணமும்; அழித்தலும் ஒரு பொருள் அன்றால் - அழிப்பதும் ஒரு பொருட்டல்ல; கடக்கும் வண்ண வெங்கடலினை - எதிரே பரந்து கிடக்கின்ற நீலநிறமுள்ள இந்தக் கொடியகடலை; கிளர் பெருஞ்சேனை - கிளர்ந்து எழும் நமது பெரிய சேனை; கடக்கும் வண்ணமும் எண்ணுதி - கடந்து இலங்கை செல்வதற்குரிய வழியைப் பற்றி நினைப்பாயாக.
பலநூல்களைக் கற்றுணர்ந்தவன் என்பதால் வீடணனை 'எண்ணும் நூல் கற்றாய்' என இராமன் அழைத்தான். கடல் நமக்குக் கட்டுப்பட்டுவிட்டால் மூவுலகத்தையும் அழிப்பது பொருட்டல்ல. எனவே, நமது படை இந்தப் பெரிய கடலைக் கடப்பதற்குரிய வழியைச் சிந்திப்பாயாக என்பான் 'கடக்கும் வண்ணமும் எண்ணுதி' என்றான் இதனை வீடணன் கூற்றாகக் கொண்டு பொருள் செய்வாரும் உளர் அளவிலா நூல் கற்றவனே என இராமனை விளித்து இந்தக் கடலைக் கட்டுப்படுத்திவிட்டால் இராக்கதரை வெல்லுதல் ஒரு பொருட்டன்று; எனவே, கடலைக் கடக்கும் வழிபற்றிச் சிந்திப்பாயாக' என்று வீடணன் கூறியதாகப் பொருள் கொள்வர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If it can be bound, then to subdue these three worlds with our shoulders,
- or to destroy them, is no great matter;
- consider how our great, surging army may cross
- this fierce sea lying dark-hued before us, O you learned in the books worth weighing!
What the poem says
A new canto begins: the canto of asking Varuṇaṉ, god of the sea, for a way across. Rāmaṉ asks Vīṭaṇaṉ, whom he calls learned in the great books, to think of a way to get the army across the ocean. Once the sea is mastered, he says, conquering or destroying the three worlds would be nothing.
Some commentators instead read the verse as Vīṭaṇaṉ's words to Rāmaṉ, with the same sense: master the sea, and defeating the demons is easy.