கம்பராமாயணம் 6634 · யுத்த 6.2

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இந்த மாக்கடல் - நமக்கெதிரே உள்ள இந்தப் பெரிய கடல்; உன் திருக்குல முதல் தலைவரால் பரந்தது - உனது சிறந்த குலமான சூரிய குலத்திலே தோன்றிய முதல் தலைவரான சகரர்களால் தோண்டப்பட்டுப் பரந்திருப்பதாகும்; கரந்து நின்ற நின்தன்மையை - தெய்வ வடிவை மறைத்து மானிட வடிவம் கொண்டு நின்ற உனது தன்மையை; அது செலக்கருதும் - அக்கடல் தெய்வம் முழுதும் கடைபோக அறியும்; பரிவாய் வரம் தரும் - நமக்குப் பரிவுடனே வரம் அளிக்கும் எனவே; படை செல வழி - நமது படை கடலைக் கடந்து செல்வதற்குரிய வழியை; எறிதிரைப் பரவையை - பொங்கும் அலைகளை உடைய இந்தக் கடலை; வேறு இரந்து வேண்டுதி என்றான் - தனியே இருந்து, சரணடைந்து இரந்து வேண்டிக் கொள்வாயாக என்றான்.

குலமுதல்தலைவர், சகரர். சகரர்கள் தோண்டியதால் 'சாகரம்' எனப் பெயர் பெற்றது என்பர் கடல் தெய்வத்தைப் பிரார்த்திப்பதற்குத் தனியே இருந்து வேண்டவேண்டுமாதலின் 'வேறு இரந்து வேண்டுதி' என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. It knows fully your nature, which you keep hidden;
  2. it was spread wide by the first chiefs of your sacred line; with kindness
  3. this great sea will grant a boon; for the army to cross,
  4. go apart and beg a path of the wave-dashing ocean,' he said.

What the poem says

Vīṭaṇaṉ advises Rāmaṉ to pray to the sea itself. The ocean was dug out by the Cakarars, the sons of King Cakaraṉ, ancestors of Rāmaṉ's own solar dynasty, which is why it is called cākaram. So the sea owes his family a debt. It also knows Rāmaṉ's true divine nature hidden in human form, and will gladly help. Rāmaṉ should go apart by himself and ask it humbly for a way across.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'karantu niṉṟa niṉ taṉmaiyai, atu celak karutum;
parantatu uṉ tiruk kula mutal talaivarāl; parivāy
varam tarum, inta māk kaṭal; paṭai cela, vaḻi vēṟu
irantu vēṇṭuti eṟi tiraip paravaiyai' eṉṟāṉ.