கம்பராமாயணம் 6635 · யுத்த 6.3

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நன்று இலங்கையர் நாயகன் மொழி - இலங்கையர் வேந்தனான வீடணன் கூறிய மொழி நல்லதே; என நயந்தான் - என்று விரும்பி உடன்பட்ட இராமபிரான்; ஒன்றுதன் பெரும் துணைவரும் - நெருங்கியதனது சிறந்த துணைவர்களும்; புடைசெல - இருபக்கமும் நெருங்கிவர; உரவோன் சென்று வேலையைச் சேர்தலும் - வலிமை மிக்கவனாகிய இராமபிரான் கடற்கரையை அடைதலும், சிவந்த குன்றின் மேல் நின்று - சிவந்த நிறம் வாய்ந்த உதயகிரியின் மேலிருந்து; பகலவன் குதிரை - சூரியனுடைய தேரிலே பூட்டப்பட்ட குதிரைகள்; விசும்பிடைக் குதித்தன - வானத்திலே குதித்துச் செல்வனவாயின.

'உரவோன்'; அறிவுத்திண்மையுடையவன் - என இராமனைக் குறிப்பிட்டார் சூரியோதயத்தாலே கீழ்த்திசையிலுள்ள உதயகிரி சிவந்திருந்ததாதலின் 'சிவந்த குன்றின் மேல்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Good are the words of the lord of the Ilaṅkai people,' he said, well pleased;
  2. and the strong one, with his great companions close at his side,
  3. went and reached the sea; and in the sky, from the reddened
  4. mountain, the horses of the sun leapt up.

What the poem says

Rāmaṉ approves Vīṭaṇaṉ's advice, already calling him lord of the people of Ilaṅkai, and goes down to the shore with his closest companions. As he arrives, dawn breaks: the sun's horses leap into the sky from the eastern mountain of sunrise, which glows red in the first light.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'naṉṟu ilaṅkaiyar nāyakaṉ moḻi' eṉa nayantāṉ,
oṉṟu taṉ perun tuṇaivarum puṭai cela, uravōṉ,
ceṉṟu vēlaiyaic cērtalum, vicumpiṭai, civanta
kuṉṟiṉ mēlniṉṟu kutittaṉa pakalavaṉ kutirai.