கம்பராமாயணம் 6636 · யுத்த 6.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேலை சூழ் ஞாலம் - கடல் சூழ்ந்த இந்த உலகமானது; கொழுங்கதிர்ப்பகை - செழுமைமிக்க சூரியனுடைய கிரணங்களுக்குப் பகையாகிய, கோளிருள் நீங்கிய கொள்கை - (இரவெல்லாம்) நிறைந்திருந்த இருள்நீங்கிய தன்மை; செழுஞ்சுடர் பனிக் கலைஎலாம் - செழுமையான ஒளியை உடைய குளிர்ந்த எல்லாக்கலைகளும்; நிரம்பியதிங்கள் - நிறைந்திருக்கும் சந்திரனை; புழுங்கு வெஞ்சினத்து - மனம் புழுங்கிக் கொடியசினத்தைஉடைய; அஞ்சனம் பொறி வரி அரவம் - அஞ்சனம் போன்ற புள்ளிகளையும் வரிகளையும் கொண்ட பாம்பாகியராகு; விழுங்கி நீங்கியது ஒத்தது - விழுங்கி உமிழ்ந்ததை ஒத்துக்காணப்பட்டது.
அஞ்சனப்பொறி - உவமைத் தொகை. கலை - சந்திரனுடைய ஒளிக்கற்றை. கொள்கை - தன்மை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the darkness that seizes and is foe to the rich rays departed,
- the sea-girt world looked like the moon, full in all its cool, bright digits,
- when the snake, seething with fierce anger, with collyrium-black spots and stripes,
- has swallowed it and let it go.
What the poem says
A picture of dawn. As the night's darkness, enemy of the sun's rays, lifts, the sea-girt earth emerges like the full moon coming out of an eclipse. In Indian myth an eclipse happens when the serpent Rāku, dark-spotted and furious, swallows the moon and then releases it. The world, swallowed all night by darkness, is now set free and shines again.