கம்பராமாயணம் 6637 · யுத்த 6.5

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தருண மங்கையை மீட்பதோர் - இளமைப் பருவத்தினளான சீதையை இராவணனுடைய சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு வருதற்குரிய ஒரு; நெறி தருக என்னும் பொருள் நயந்து - வழியைத் தருவாயாக என்னும் பொருளை விரும்பி; நல்நூல் நெறி அடுக்கிய புல்லில் - நல்ல நூலாகிய வேதத்தின் கூறிய நெறிப்படி அடுக்கப்பட்ட தருப்பைப் புல்லில், கருங்கடல் நோக்கி - கருமை நிறமான கடலைப் பார்த்தபடி; கருணையங்கடல் கிடந்தனன் - கருணைக் கடலான இராமபிரான் படுத்தபடி இருந்தவன்; விதிமுறை வணங்கி - வருணனைத் தொழவேண்டியமுறைப்படி தொழுது; வருண மந்திரம் எண்ணினான் - வருண மந்திரத்தைத் தியானித்தவனாக இருந்தான்.

மாறாத இளமையுடைய சீதாபிராட்டியை 'தருண மங்கை' என்றார். தருணம் - இளமை. வேதமந்திரங்களைக் கூறி அதன்படி அடுக்கப்பட்ட தருப்பைப்புல் ஆதலின் 'நல்நூல் நெறி அடுக்கியபுல்' என்றார். நல்நூல் - வேதம். வருணனை வணங்கவேண்டிய விதிமுறைப்படி வணங்கியதை 'விதிமுறை வணங்கி' என்றார். கருங்கடல் - பண்புத்தொகை. எண்ணுதல் - இடைவிடாது நினைத்தல் (தியானித்தல்) 'கருங்கடல் நோக்கிக் கருணையங்கடல் கிடந்தான்' என்ற சொல்லமைப்பின் நயம் தேர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Longing for this: 'Grant me a way to rescue the young woman',
  2. on grass laid out as the good books prescribe,
  3. the sea of compassion lay facing the dark sea;
  4. bowing in the ordained way, he meditated on the mantra of Varuṇaṉ.

What the poem says

Rāmaṉ follows Vīṭaṇaṉ's advice. He lies on darbha grass spread in the manner the Vedas lay down, facing the ocean, and after bowing in the prescribed way he fixes his mind on the mantra that invokes Varuṇaṉ, asking for a way to rescue Cītai, whose youth never fades.

The commentary points to the wordplay of the line: the 'sea of compassion', Rāmaṉ, lies facing the 'dark sea'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'taruṇa maṅkaiyai mīṭpatu ōr neṟi taruka!' eṉṉum
poruḷ nayantu, nal nūl neṟi aṭukkiya pullil,
karuṇai am kaṭal kiṭantaṉaṉ, karuṅ kaṭal nōkki;
varuṇa mantiram eṇṇiṉaṉ, viti muṟai vaṇaṅki.