கம்பராமாயணம் 6638 · யுத்த 6.6

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பூழி சென்று தன் திரு உருப் பொருந்தவும், புரைதீர்
வாழி வெங்கதிர் மணிமுகம் வருடவும், வளர்ந்தான்;
ஊழி சென்றன ஒப்பு என, ஒரு பகல்; அவை ஓர்
ஏழு சென்றன; வந்திலன், எறி கடற்கு இறைவன்.

பொருள் · Meaning in Tamil

பூழி சென்று தன் திருவுருப் பொருந்தவும் - கடற்கரைப் புழுதியெல்லாம் இராமபிரானுடைய திருமேனியில் பொருந்தவும்; புரை தீர் வாழி வெங்கதிர் மணிமுகம் வருடவும் - குற்றம் நீங்கிய வெம்மை வாய்ந்த சூரியனுடைய கிரணங்கள் அழகிய முகத்தைத் தடவவும்; வளர்ந்தான் - இராமபிரான் தருப்பையின் மீது கண்களை மூடியவனாகப் படுத்திருந்தான்; ஒரு பகல் ஊழி சென்றன ஒப்பன - ஒருநாள் கழிவது பல ஊழிகள் செல்வன போன்றிருந்தது சென்றும்; அவை ஓர் ஏழு சென்றன - அத்தகை நாட்கள் ஏழு சென்றன; எறிகடற்கு இறைவன் வந்திலன் - அலையெறியும் கடல் அரசனான வருணன் வந்தானல்லன்.

வருடுதல் - தடவுதல். ஒரு பகல் கழிவது ஒரு ஊழிக்காலம் கழிவது போலிருந்தது 'ஒரு பகல் பற்பல ஊழிகளாய் விடும்' என்ற திருவிருத்தம் நினைவு கூறத்தக்கது. இப்படிப்பட்ட ஏழு நாள்கள் சென்றும் வருணன் வந்திலன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the dust settling on his sacred form, and the flawless,
  2. blessed, hot rays of the sun stroking his jewel-like face, he lay;
  3. each single day was like ages passing; of those,
  4. seven went by; the lord of the wave-dashing sea did not come.

What the poem says

Rāmaṉ lies on the grass on the beach for days, covered in dust, the hot sun beating on his face. Each day feels like an age, an image the commentary links to a line in Nammāḻvār's Tiruviruttam. Seven such days pass, and still Varuṇaṉ, the god of the sea, does not appear.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pūḻi ceṉṟu taṉ tiru urup poruntavum, purai tīr
vāḻi veṅ katir maṇi mukam varuṭavum, vaḷarntāṉ;
ūḻi ceṉṟaṉa oppaṉa, oru pakal; avai ōr
ēḻu ceṉṟaṉa; vantilaṉ, eṟi kaṭaṟku iṟaivaṉ.