கம்பராமாயணம் 6639 · யுத்த 6.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊற்றம் மீக் கொண்ட வேலையான் - செருக்கு மேலோங்கப் பெற்ற இந்தக் கடல் வேந்தன்; உண்டு, இலை என்னும் மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் - உண்டு, இல்லை என்று சொல்லக் கேட்கவும் பெற்றோமில்லையாம்; எனும் மனத்தால் - என்ற எண்ணத்தால்; ஏற்றம் மீக் கொண்ட புனலிடை - பெருகிப் பொங்கி வரும் தண்ணீரிலே; எரி முளைத்தென்ன - நெருப்புத் தோன்றியது போல; சீற்றம் மீக் கொண்டு - சினம் மேலோங்க; தாமரைச் செங்கண் சிவந்தன - இராமபிரானுடைய தாமரை மலர் போன்ற செம்மையான கண்கள் கோபத்தால் சிவந்தன.
வேலையான் - கடல் வேந்தன். கருணைக் கடலான இராமபிரானுக்குக் கோபம் இயற்கையல்ல என்பதால் பொங்கி எழும் புனலிடையே நெருப்பு முளைத்தது போல், கருணை நிறைந்த உள்ளத்திலே சினம் கொண்டான் என்றார். நீரிலே நெருப்பு முளைக்காது எனவே இது இல்பொருளுவமையாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the thought, 'From the lord of the sea, grown overweening in pride,
- we have not received even a word, yes or no',
- like fire springing up in a rising flood of water,
- anger rose high, and his red lotus eyes turned redder.
What the poem says
Rāmaṉ's patience runs out. The proud sea-king has not even answered him, yes or no. Anger rises in him, and his lotus eyes turn red.
Anger is not natural to Rāmaṉ, a sea of compassion, so it is compared to fire springing up in the middle of a flood. Since fire cannot really grow in water, this is an 'impossible' comparison, used for something extraordinary.