கம்பராமாயணம் 6640 · யுத்த 6.8

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மாண்ட இல் இழந்து அயரும் நான், வழி, தனை வணங்கி,
வேண்ட,"இல்லை" என்று ஒளித்தது ஆம்' என மனம் வெதும்ப,
நீண்ட வில் உடை நெடுங் கனல் உயிர்ப்பொடு நெடுநாண்
பூண்ட வில் எனக் குனித்தன, கொழுங்கடைப் புருவம்.

பொருள் · Meaning in Tamil

மாண்ட இல் இழந்து அயரும் நான் - மாண்புமிக்க இல்லாளாகிய சீதாபிராட்டியை இழந்து வருந்தும் நான்; வழிதனை வணங்கி வேண்ட - அந்த பிராட்டியை மீட்டு வரச் செல்லவழியை வணங்கி வருணனை வேண்டவும்; இல்லை என்று ஒளித்ததாம் என - வழிவிடுதற்கில்லை என்பதால் வருணன் வராது ஒளிந்தனனோ என்று; மனம் வெதும்பி - இராமபிரான் மனம் வெதும்பினானாக; நீண்ட வில்லுடை நெடுங்கனல் உயிர்ப்பொடும் - நீண்ட ஒளியை உடைய நெருப்பைப் போன்ற பெருமூச்சுடனும்; நெடு நாண் பூண்டவில் என - நீண்ட நாண் பூட்டிய வில்லைப் போலவும்; கொழுங்கடைப் புருவம் குனிந்தன - செழுமையான புருவங்கள் வளைந்தன.

சினத்தாலும் புருவங்கள் வளைதலுண்டு என்பதால் 'புருவம் குனிந்தன' என்றார். 'மாண்டஇல்' என்பதற்கு மாண்புடைய மனைவி என்பது பொருள் 'மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்' என்ற புறப்பாடலில் (புறம் - 191) இப்பொருளில் வந்தது நினைதற்குரியதாம். இல்லை என்று சொல்லும் குறிப்புத் தோன்ற ஒளிந்து கொண்டான் என்னும் பொருள்பட 'இல்லை என்று ஒளித்ததாம்' என்றார் புருவம் வளைந்தது வில் வளைவதை நினைவு படுத்தும். நீண்டவில் - நெடிய ஒளி. நாண் பூண்ட வில் - நாண் பூட்டியவில்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When I, worn down by the loss of my noble wife, bowed and begged
  2. for a way, it hid itself, as good as saying "No"': so his heart burned,
  3. and with long, fiery breaths of far-reaching flame
  4. his rich-tipped brows bent like a bow strung with a long string.

What the poem says

Rāmaṉ is stung: he has lost his noble wife, he humbly begged the sea for a path, and the sea has hidden itself as a silent way of saying no. He breathes out hot, fiery sighs, and his brows arch in anger like a bow bent with its string drawn.

'Māṇṭa il', noble wife, is an old phrase; the commentary cites a Puṟanāṉūṟu poem that uses it in this sense.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'māṇṭa il iḻantu ayarum nāṉ, vaḻi, taṉai vaṇaṅka,
vēṇṭa, "illai" eṉṟu oḷittatām' eṉa maṉam vetumpi,
nīṇṭa villuṭai neṭuṅ kaṉal uyirppoṭum neṭu nāṇ
pūṇṭa vil eṉak kuṉintaṉa, koḻuṅ kaṭaip puruvam.