கம்பராமாயணம் 6641 · யுத்த 6.9

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"ஒன்றும் வேண்டலர் ஆயினும், ஒருவர் பால் ஒருவர்,
சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையில் தீரார்;
இன்று வேண்டியது எறிகடல் நெறிதனை மறுத்தான்;
நன்று! நன்று!'என நகையொடும் புகை உக நக்கான்.

பொருள் · Meaning in Tamil

ஒன்றும் வேண்டலர் ஆயினும் - ஒருவர் எவரிடமும் எதையும் வேண்டாதவர் என்றாலும்; ஒருவர் பால் ஒருவர் சென்று வேண்டுவரேல் - ஒருவரிடம் ஒருவர்சென்று ஒரு பொருளை வேண்டுவாராயின்; அவர் சிறுமையின் தீரார் - அவ்வாறு வேண்டியவர் சிறுமையிலிருந்து நீங்க மாட்டார்; இன்று வேண்டியது - இன்று நான் வருணனை வேண்டியதாகிய; நெறிதனை எறிகடல் மறுத்தான் - இலங்கைக்குச் செல்லும் வழியைத் தர அலைபொங்கும் கடல் வேந்தன் மறுத்துவிட்டான்; நன்று நன்று என - நல்லது நல்லது என்று; நகையொடு புகை உக - சிரிப்போடு, கோபத்தால் புகையும் தோன்ற; நக்கான் - இராமபிரான் கோபச்சிரிப்புச் சிரித்தான்.

பொதுப் பொருளைக் கூறிச் சிறப்புப் பொருளை விளக்குவதால் இது வேற்றுப் பொருள் வைப்பணியாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Even one who wants nothing at all, if he goes to another
  2. and begs of him, does not escape being made small;
  3. today the wave-dashing sea refused the path I asked for.
  4. Good! Good!' he said, and laughed, smoke pouring out with his laughter.

What the poem says

Rāmaṉ laughs bitterly, with smoke of anger in his laughter. Anyone who goes to another and begs, however self-sufficient he may be, is made small by it; and now the sea has refused him the path he asked for.

The commentary names the figure: a general truth stated to support a particular case, known in Tamil poetics as vēṟṟup poruḷ vaippu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"oṉṟum vēṇṭalar āyiṉum, oruvarpāl oruvar,
ceṉṟu vēṇṭuvarēl avar ciṟumaiyiṉ tīrār;
iṉṟu vēṇṭiyatu eṟi kaṭal neṟitaṉai maṟuttāṉ;
naṉṟu! naṉṟu!' eṉa nakaiyoṭum pukai uka nakkāṉ.