கம்பராமாயணம் 6643 · யுத்த 6.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புரந்து கோடலும் - (ஒருவரிடமிருந்து ஒரு பொருளைப் பெற விரும்பினால்) அவர்களைப் பாதுகாத்து அவரிடமிருந்து வேண்டிய பொருளைப் பெற்றுக் கொள்வதும்; புகழொடு கோடலும் - பொருளை வைத்திருப்பவருடன் போர் செய்து, வெற்றி பெற்று, புகழோடு அப்பொருளைப் பெற்றுக் கொள்ளுவதும்; பொருது துரந்து கோடலும் - போரிட்டு வென்று, பகைவனைத் துரத்திவிட்டுப் பொருளைக் கைப்பற்றிக் கொள்வதும்; என்று இவை தொன்மையின் தொடர்ந்த - என்ற இவையெல்லாம் தொன்மைக் காலம் முதல் தொடர்ந்து வருவனவாம்; இரந்து கோடலின் - (இருந்தும், நான் வருணனை வேண்டி வழிபெற விரும்பினேன்) அப்படி இரந்து பெறுவதைவிட; இயற்கையும் தருமமும் எஞ்ச - எனது இயற்கைக்கும், அறத்துக்கும் குறைவு உண்டாகும்படி; கரந்து கோடலே நன்று - நமக்கு வேண்டிய வழியைக் கவர்ந்து கொள்வதே இனி நல்லது; இனி நின்றது என் கழறி - இனி வேறு பேசி என்ன பயன் (வருணனைப் பலவாறு குறை கூறி என்னபயன்.
புரந்து - பாதுகாத்து. ஒரு பொருளை ஒருவரிடமிருந்து பெற விரும்பினால் அவர்களை ஆதரித்துக் காப்பதால் அவராகத் தரப்பெறுவது 'புரந்து கோடல்'; பகைவருடன் போர் செய்து வென்று, அவர்க்குரியதை புகழுடன் பெறுவது 'புகழொடு கோடல்'; வலிமையால் பகைவனை விரட்டிவிட்டு வேண்டிய பொருளை அடைவது துரந்து கோடல். இவை மூன்றும் தொடர்ந்து வரும்முறை. இதைவிட்டு இயற்கையும், அறமும் சார்ந்த இரந்து பெறும் முறையை மேற்கொண்டேன்; வருணன் வரவில்லை. இனி இயற்கைக்கும் அறத்துக்கும் மாறான தெனினும் நமக்கு வேண்டிய வழியைக் கவர்ந்து பெறுவதே ஏற்றது என்பான் "கரந்து கோடலே நன்று" என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taking by protecting, taking with glory by fighting,
- and taking by driving the foe away: these have come down from of old;
- rather than taking by begging, it is better now to take by seizing,
- though my nature and dharma suffer for it. What is left to gain by more words?
What the poem says
Rāmaṉ reasons it out. By old custom there are three honourable ways for a king to obtain something: receive it from those he protects, win it gloriously in battle, or take it after driving off the enemy. He chose a fourth way, begging, out of gentleness and respect for dharma, and the sea ignored him. Now, even if it goes against his nature, he will simply take the path by force. Nothing more needs to be said.