கம்பராமாயணம் 6644 · யுத்த 6.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கானிடைப் புகுந்து - நாட்டை விட்டுவிட்டு காட்டுக்கிடையிலே சென்று வாழ்ந்து; இரும் கனியொடு காய் நுகர்ந்த - பெரிதான பழங்களையும் காய்களையும் உண்டதனால்; ஊனுடைப் பொறை உடம்பினன் - உண்டான தசையையும் பெரிய உடலையும் உடையவன் நான்; என்று கொண்டு உணர்ந்த - என்று கருதி, கேவலமாக என்னை உணர்ந்த; மீனுடைக் கடற் பெருமையும் - மீன்களை உடைய கடலின் பெருமையையும்; வில்லொடு நின்ற மானுடச் சிறுதன்மையும் - (படைத்துணையேதுமின்றி கையில் வில்லேந்தி நின்ற மானுடத்தின் சிறுமையையும்; வானோர் காண்பரால் - தேவர்கள் காணட்டும்.
நாடாளும் மன்னர் குலத்தில் பிறந்தும் - நாட்டில் வாழாமல் காட்டில் வாழ நேர்ந்தமையால் 'கானிடைப் புகுந்து' என்றார் கனியையும் காய்களையும் தின்று பருத்த உடல்தானேயன்றி வலிமையில்லை என்பதை 'கனியொடு காய் நுகர்ந்த ஊனுடைப் பொறை உடம்பினன்' என்றார். மானுடத்தின் சிறுமையையும், கடலரசனுடைய பெருமையையும் தேவர்கள் பார்க்கட்டும் என்பான் 'மீனுடைக் கடற் பெருமையும், மானுடச் சிறுதன்மையும் வானோர் காண்பர்' என்றான். வெகுளியில் பிறந்த இச்சொற்கள் எள்ளுதற் குறிப்புடையன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- '"He went into the forest and, living on big fruits and unripe ones,
- has only a body that is a lump of flesh": so it judged me;
- the greatness of the fish-filled sea, and the small worth
- of the man who stands here with a bow: let the gods in heaven watch them both.'
What the poem says
Rāmaṉ speaks with bitter irony. The sea, he imagines, thinks him a mere exile who lives on fruits in the forest: plenty of flesh, no real strength. Very well: let the gods watch and see the 'greatness' of the sea and the 'smallness' of this man with his bow. His words, born of anger, are heavy with mockery.