கம்பராமாயணம் 6645 · யுத்த 6.13

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏதம் அஞ்சி நான் இரந்ததே - தீமைக்குப் பயந்து நான் வருணனை இரந்து வேண்டியதனையே கொண்டு; எளிதென இகழ்ந்த - எளியவன் என்று இகழ்ந்து வராத; ஓதம் அஞ்சினோடு இரண்டும் - ஐந்துடன் இரண்டாகிய ஏழு கடல்களும்; வெந்து ஒரு பொடியாக - எனது அம்பால் வெந்து தூள்தூளாகவும்; பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து - ஐம்பெரும் பூதங்களும் வந்து என்னை வணங்கி; உயிர் கொண்டு பொரும் - உயிர் கொண்டு வாழ வேண்டி அழுது தேம்பவும்; பாதம் அஞ்சலர் - நடந்து செல்ல அஞ்சாதவர்களாய்; என் படைஞர் செஞ்செவே படர்வர் - எனது வானரப் படை வீரர்கள் செம்மையாகக் கடலிடையிலே செல்வார்கள்.

அம்பெய்து கடலை வற்றச் செய்தால் கடலில் வாழும் மீன் முதலியவை அழிய நேரிடும் என்ற தீமைக்குப் பயந்து, என்பதை 'ஏதம் அஞ்சி' என்றான். ஏதம் - தீமை. ஏழு கடலும் என் அம்பால் தூளாக, ஐம்பெரும் பூதங்களும் அஞ்சி உயிர் பிழைத்துவாழ என்னை வணங்கி அழுது தேம்ப - கடல் நீர் சுண்டித் தரை வெளிப்பட்டால் என் படைவீரர்கள் செம்மையாக நடந்து செல்வர் என்பது பொருள். செஞ்செவே - செம்மையாக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'That I begged, fearing harm, it scorned as weakness;
  2. so let the seas, five and two, burn and become a single dust,
  3. let the five elements come with joined palms and sob for their lives,
  4. and my soldiers will walk straight across, with no fear for their feet.'

What the poem says

Rāmaṉ explains why he had begged in the first place: he feared the harm that drying up the sea would do to the creatures living in it. The sea took that restraint for weakness. Now he will burn all seven seas to dust; the five elements themselves will come with folded hands, weeping for their lives; and his monkey army will march straight across on the dry seabed without fear.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ētam añci, nāṉ irantatē, "eḷitu" eṉa ikaḻnta
ōtam añciṉōṭu iraṇṭum ventu oru poṭi ākap
pūtam añcum vantu añcalittu uyirkoṇṭu poruma,
pātam añcalar ceñcevē paṭarvar, eṉ paṭaiñar.