கம்பராமாயணம் 6646 · யுத்த 6.14

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மறுமை கண்ட மெய்ஞ் ஞானியர் - மறுமை இன்பமான முத்தி இன்பத்தை அனுபவித்த உண்மையான ஞானிகள்; ஞாலத்து வரினும் - இந்த உலகத்துக்கு வந்தார்களாயினும் அவரிடம்; வெறுமை கண்டபின் - தாம் விரும்பும் சிறப்பியல்பின்மை கண்டால்; யாவரும் யார் என விரும்பார் - எவரும் அந்த ஞானிகளை யார் என்று கேட்டறிந்து போற்றவிரும்பமாட்டார்; குறுமை கண்டவர் - ஒருவாறு உருவம் சிறிதாயிருப்பதைப் பார்த்தவர்கள்; கொழுங்கனல் என்னினும் கூசார் - அச்சிறிய வடிவுடையவர்கள் செழுமையான நெருப்பை ஒத்த திறம் வாய்ந்தவர் என்றாலும் அவர்களுக்கு அஞ்சமாட்டார்; சிறுமை கண்டவர் - உருவத்திலே சிறுமையைப் பார்த்தவர்கள்; பெருமை கண்டு அல்லது தேறார் - பெருமை, வலிமைகளைக் கண்டாலல்லது தெளிவு பெறமாட்டார்

'மறுமை கண்ட மெய்ஞ்ஞானியர்' என்போர் முத்திப் பேறடைந்த உண்மைமிக்க ஞானிகளாவார். அத்தகைய மேலோர் இவ்வுலகத்துக்கு வர நேர்ந்தாலும் அவர்களிடம் ஏதேனும் சிறப்பியல்புகள் இருந்தால் மட்டுமே உலகத்தார் மதிப்பர்; இல்லையென்றால் 'யார்' என்றே கண்டு கொள்ள மாட்டார்கள். ஒருவரது சிறிய உருவத்தைப் பார்த்தவர்கள் - அச்சிறிய வடிவில் கொழுந்து விட்டெரியும் கனல் போன்ற ஆற்றலும் ஞானமும் இருப்பதை அறிந்து போற்றார். சிறுமை கண்டவர் பெருமை, வலிமைகளைக் கண்டால் அல்லது தெளிவடைந்து போற்றார்; இது பிறிது மொழிதலணியாம். உலகத்தார் இயல்பைக் கூறி வருணன் தன்னை மதித்து வராமைக்குக் காரணம் இதுவென இராமபிரான் கூறலானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Even if true sages who have seen the life beyond come into this world,
  2. once people see them bare of show, no one cares to ask who they are;
  3. those who see smallness do not shrink back, though it be a blazing fire;
  4. those who have seen smallness will not be convinced until they see greatness.'

What the poem says

Rāmaṉ states a general truth about how the world judges. Even enlightened sages who have attained liberation are ignored if they appear without outward distinction. People who see a small form do not fear it, even if it holds the power of a blazing fire; only a display of greatness convinces them.

This is an indirect statement: by describing the world's ways, Rāmaṉ explains why Varuṇaṉ has not come to him. He has seen only a humble man, and must now be shown his power.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṟumai kaṇṭa meyñ ñāṉiyar ñālattu variṉum,
veṟumai kaṇṭa piṉ, yāvarum yār eṉa, virumpār;
kuṟumai kaṇṭavar koḻuṅ kaṉal eṉṉiṉum kūcār;
ciṟumai kaṇṭavar perumai kaṇṭu allatu tēṟār.