கம்பராமாயணம் 6647 · யுத்த 6.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திருதி என்ப தொன்று அழிதர - மனவடக்கம் என்ற ஒன்று குறைந்திருப்பதால்; ஊழியில் சினவும் பரிதி மண்டிலம் என - ஊழிக் காலமுடிவில் சினந்து தோன்றும் சூரிய மண்டிலம் என்று கூறும்படியாக; பொலிமுகத்தினன் - பொலிந்து தோன்றும் முகத்தினனான இராமபிரான்; பலகால் தருதி வில் எனும் அளவையின் - பலமுறை 'வில்லைத்தா' என்று கேட்ட அளவிலே; தம்பியும் வெம்பி - தம்பியான இலக்குவனும் வெகுளியால் வெம்பி; குருதி வெங்கனல் உமிழ்கின்ற கண்ணினன் - குருதியோடு, கொடிய தீப்பொறி உமிழும் கண்களை உடையவனாய்; கொடுத்தனன் - இராமபிரானிடம் வில்லைக் கொடுத்தான்.
வருணனை நினைத்துத் தவம் புரிந்த போதிருந்த மனவடக்கம் இப்போதில்லாமை பற்றி 'திருதி என்பதொன்று அழிதர' என்றார். திருதி - அடக்கம், குறைதல். கோபத்திலும் இராமன் முகம் பொலிவது தவ, ஒழுக்கங்களால் ஆகும். விரைந்து கடல் மீது அம்பு செலுத்த வேண்டும் என்பதால் 'பல்கால் தருதி வில்' என்றான். பல தடவை கேட்டமையால் பல தடவை பொறுத்தமையும் தெளிவாகிறது. கொடிய நெருப்பை உமிழும் கண்ணினனான இலக்குவன் என்பதை 'குருதி வெங்கனல் உமிழ்கின்ற கண்ணினன்' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the thing called restraint gone, his face blazing
- like the orb of the sun that rages at the end of an age,
- as soon as he said again and again, 'Give me the bow', his brother too, burning,
- his eyes spitting blood-red, fierce fire, gave it to him.
What the poem says
Rāmaṉ's composure is gone. His face blazes like the sun at the end of an age, though the commentary notes that even in anger it keeps its radiance, the fruit of his discipline. He calls out repeatedly, 'Give me the bow', impatient to shoot; that he asks several times shows how long he had held back. Ilakkuvaṉ, his own eyes flashing with rage, hands it to him.